புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 17, 2024)

உபத்திரவங்கள் நேரிடும் போது

ரோமர் 12:12

நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.


ஒரு ஊரிலே வாழ்ந்த தகப்பனானவனொருவனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். அவர்கள் வளர்ந்து வருகின்ற போது, மூத்தவன் அவ் வப்போது இளையவனை தொந்தரவு செய்து கொண்டு வந்தான். அதை அறிந்து கொண்ட தகப்பனானவர், இருவரையும் அழைத்து, நீங்கள் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டியவர்கள், ஒருபோதும் உங்களுக்கிடையில் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடாது என்று அறிவுரை கூறியிருந் தார். ஒரு நாள் மூத்தவன், இளையவனுக்கு தொடர்ச்சி யாக தொந்தரவு செய்த போது, அவன் தன் தகப்ப னானவரிடம் சென்று முறை யிட்டான். தகப்பனானவரோ, மறுபடியும் அவர்களை ஒன் றுபட்டு வாழும்படி கேட்டுக் கொண்டார். இளையவனோ, தன் தமை யனானவன், மன்னிப்பு கேட்க வேண்டும், அவன் செய்த குற்றத்திற்கு தண்டிக்கப்பட வேண்டும் என்று பிடிவாதமாக நின்றான். மூத்தவனும் சூழ்நிலையை இலகுவாக்க மனதில்லாதவனாய், மன்னிப்பு கேட்க மறு த்தான். அதனால், அந்த ஊரின் வழக்கப்படி, தகப்பனானவர், மூத்த வனை இளையவன் முன்னிலையிலே தண்டித்தார். அதைக் கண்ட இளை யவனுக்கு, தான் நினைத்தபடி தமையனானவன் தண்டிக்கப்பட்டான் என்று மனத்திருப்பியடைந்தான். தமையனானவனோ, மனதிலே கோபம் மூண்டவனாக, இளையவனை நோக்கி: இது ஒரு தொடர்கதை, நான் இதற்கு பதில் செய்யும் காலம் வரும் என்று தன் வழியே போய் விட்டான்;. இளையவனோ, நீ மறுபடியும் தவறு செய்தால் நான் உன் னை சும்மாவிடப் போவதில்லை என்ற எண்ணத்துடன் இருந்தான். தகப் பனானவரோ, இருவருடைய மனக்கடினத்தையும், பகைமையையும் கண்டு மிகவும் மனவருத்தப்பட்டார். பிரியமான சகோதர சகோதரிகளே, இப்படிப்பட்ட சம்பவங்கள் கிறிஸ்துவின் சிந்தையை தரித்தவர்களுக்கு ரியதல்ல. இப்படிப்பட்ட நடக்கைகள் கிறிஸ்துவின் சபைக்குரியதல்ல. இன்று மனிதர்கள் நீதி செய்யப்பட வேண்டும் என்று தீவிரிக்கின்றா ர்கள். தாங்கள் நினைத்த பிரகாரம் நீதி செய்யப்பட்டால் மனத்தி ருப்தி யடையகின்றார்கள். அதனால் மனதின் மாம்ச இச்சைகள் நிறைவேற் றப்படுகின்றது. ஆனால், மறைவாக பகையையும் பிரிவினையும் மனை ந்து பெருகிக் கொண்டு போகின்றது. நாம் பெற்றுக் கொண்ட அழைப்பு மேலானது. எனவே தீமையை நன்மையினாலே வெல்லவும், ஜெபத் திலே உறுதியாய் தரித்திருக்கவும் பழகிக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

நீடியபொறுமையுள்ள தேவனே, நான் என் நீதி நேர்மையைக் குறித்து மனக்கடினம் அடையாமல், நன்மை செய்து பாடநுபவிப்பதன் மேன்மையை நீர் எனக்கு கற்றுத் தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 6:35