தியானம் (ஆனி 16, 2024)
தேவ நீதியில் வேற்றுமை இல்லை
உபாகமம் 10:17
அவர் பட்சபாதம்பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல
மோசேயானவன் பிறந்த போது, அவன் திவ்விய சவுந்தரியமுள்ளவன் என்று அவனுடைய பெற்றோர்கள் கண்டார்கள். அதாவது, அந்த குழந்தையை குறித்த விசேஷpத்த தன்மையை அவன் பிறப்பிலேயே அவர்கள் கண்டு கொண்டார்கள். அவன் வளர்ந்து பெரியவனாகிய போது, எகிப்தின் சகல சாஸ்திரங்களையும் கற்று தேர்ந்தவனாக இருந்தான். தன் சகோதர்கள் படும் பாடுகளிலே அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும், அவர்களை விடு தலையாக்க வேண்டும் என்ற நல் மனம் அவனுக்கிருந்தது. ஆனால் தேவனுடைய பிள்ளைகளுகடைய வாழ்விலே தேவன் முன்குறித்த ஒரு நேரமுண்டு. அந்த நேரம் முந்து வதுமில்லை. பிந்துவதுமில்லை. மோசேயானவன் அழைப்பை பெற் ற வனாக இருந்த போதும், குறித்த காலத்திற்கு முன்னதாகவே, காரியங்க ளை தன் கையிலே எடுத்துக் கொண்டு, தன் சகோதரர்களுக்கு நீதி செய்ய வேண்டும் என்று முற்பட்டான். அவன் நல்லெண்ணங் கொண் டவனாக இருந்த போதும், சுயமாக அவன் எடுத்த தீர்மானங்களினால் பின் விளைவுகளுக்கு அவன் தப்பித்துக் கொள்ளக்கூடாதிருந்தது. பின் னர் அவன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து கொண்ட விசேஷpத்த பாத் திரமாக திகழ்ந்தபோதும், அவன் எப்போதெல்லாம் தேவனுடைய சத்த த்தை கேட்டு, அவர் கூறுவதை செய்தானோ, தேவனானவர் அவனோடு இருந்து அவனுடைய காரியங்களை வாய்க்கப் பண்ணினார். அவனு க்காக வழக்காடினார். ஆனால், அவன் தேவனானவர் சொல் லாத காரி யமொன்றை மேரிபாவின் தண்ணீர் விடயத்தில் செய்ததால், அவன் தேவனுடைய ஊழியக்காரனாக இருந்தபோதும், நீதியுள்ள தேவன் தாமே அவனை கண்டித்தார். அவனை தண்டித்தார். பிரியமான சகோதர சகோதரிகளே, நம்முடைய தேவனாகிய கர்த்தரி டத்தில் பட்சபாதமி ல்லை. விசுவாசிகள் தவறும்போது சிட்சிக்கின்ற வரும், தன்னுடைய ஊழியர்கள் தவறும் போது பாராமுகமாக இருப்ப வருமல்லர். இந்த பரம யாத்திரையின் பாதையிலே, அவரவருக்கு சில பதவிகள் அல்லது விசேஷpத்த அழைப்புக்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம். அதனால், அவர் கள் தேவ நீதிக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. எனவே, பரம அழைப்பின் மேலான பந்தையப் பொருளின்மேல் கண்களை பதியவைத்து, அதை நோக்கி ஓடுங்கள். உபத்திரவங்களிலே பொறுமையாக இருங்கள். கீழ்ப டிதலை கர்த்தரிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். தேவனானவர் எல்லா வற்றையும் அறிந்திருகின்றார். அவர் நீதிபரர்.
ஜெபம்:
மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கின்றவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கின்றீர் என்று உணர்ந்து நான் பொறுமையோடு என் பொறுப்புகளை நிறைவேற்ற கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - ரோமர் 2:11