புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 15, 2024)

சொந்தக் கருத்துக்களும் தேவ சித்தமும்

எண்ணாகமம் 12:7

என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்.


'கர்த்தர் மோசேயைக்கொண்டுமாத்திரம் பேசினாரோ, எங்களைக் கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார்.' என்று மோசேயின் மூத்த சகோதரியாகிய மிரியாமும் மூத்த சகோதரனான ஆரோனும், மோசே விவாகம்பண்ணின எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசினார்கள். மோசே யானவனோ பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ள வனாயிருந்தான். இன்றைய நாட்க ளிலே ஒரு மனிதனுக்கு விரோதமாக அவருடைய சொந்த சகோதரனோ அல்லது சகோதரியோ எதிர்த்து நின் றால், பொதுவாக மற்றய மனிதர்கள் என்ன கூறுவார்கள்? அவனுடைய சொந்த சகோதரர்களே எதிர்த்து நின்கின்றார்கள் என்று கூறிக் கொள்ள மாட்டார்களோ? மனிதர்கள் தங் கள் சொந்தக் கருத்துக்களை கூறிக்கொள்ள எந்தத் தடையுமில்லை. ஆனால் அந்த கருத்துக்கள் தேவனுக்கு விரோதமானதாக இல்லாதிரு ந்தால், அது அதை கூறிக் கொள்பவர்களுக்கு நல்லது. மோசேயான வனைக் குறித்து அவனுடைய அக்காவும், அண்ணாவும் விமர்சித்ததை, தேவனாகிய கர்த்தர் கேட்ட போது, அவருடைய கோபம் அவர்கள்மேல் மூண்டது. அவர்கள் மோசேக்கு அல்ல தேவனுக்கு விரோதமாக எதிர் த்து நின்றதால், அவர்களுடைய வாழ்விலே பாதகமாக பின்விளைவுகள் உண்டாயிற்று. மோசேயின் பரிந்து பேசுதலினாலே அவர்கள் மரண த்திற்கு தப்பித்துக் கொண்டார்கள். பிரியமான சகோதர சகோதரிகளே, இந்த தியானமாது ஊழியர்களுக்கு சார்பாக எழுதப்பட்டிருக்கின்றது என எண்ணங்கொள்ளாமல், தேவனுக்கு விரோதமாக நீங்கள் எண் ணங்கொள்ளாதபடிக்கு எச்சரிக்கையுள்ளவர்களாக இருங்கள். நீங்கள் தேவனுடைய ஊழியத்தை தாங்குகின்றவர்களாகவும், அதைக் குறித்து கரிசணையள்ளவர்களாகவும் இருந்தால், நீங்கள் ஒரு காரியத்தை செய்ய முன்பு, நீங்கள் செய்யப்போவதை ஆராய்ந்து பாருங்கள். தேவனுக்கு விரோதமாக யார் எதிர்த்து நிற்கக்கூடும்? தேவன் தம்மு டைய உழியர்களை விசாரிப்பார். உங்கள் நடவடிக்கைகள் சபை ஐக்கியத்தை குழப்பி, விசுவாசிகள் மத்தியிலே பிரிவினைகளை உண்டாக்காதபடி இருக்கும்படிக்கு, வேத வார்த்தைகளின் தியானத் தோடும், ஊக்கமான ஜெபத்தோடும் உங்கள் கிரியைகள் நடத்தப் படுவதாக.

ஜெபம்:

உம்முடைய கிருபையினாலே என்னை நடத்திச் செல்லும் தேவனே, நான் என்னுடைய சுய நீதியின்படி உம்முடைய காரியங்களை நடத்த எண்ணங்கொள்ளாதபடிக்கு என்னை காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - அப்போஸ்தலர் 5:39