புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 12, 2024)

மனம்திரும்பும் இருதயத்தை புறக்கணியார்

சங்கீதம் 51:17

தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதய த்தை நீர் புறக்கணியீர்.


நீ என்னோடு இருந்து இந்தப் பண்ணையிலே வேலை செய்து பங்காளியாக இரு. காலப்போக்கிலே அவை யாவும் உன்னைச் சேரும் என்று ஒரு தகப்பனானவன் தன் குமாரனானவனுக்கு கூறிக் கொண் டான். பண்ணையிலே வேலை செய்வதென்றால், ஒழுங்கு முறைகளும் கட்டுப்பாடுகளும் உண்டு. காலையிலே நேரத்தோடு நித்திரைவிட்டு எழுந்திருக்க வேண்டும். இரவிலே நேரத்திற்கு நித்திரைக்கு செல்ல வேண்டும். நண்பர்களோடு உல் லாசமாக இருக்க முடியாது. என்று பல யோசனைகள் அந்தக் குமார னானவனின் மனதை குழப்பியது. இது வாலிப வயது! வாலிபம் நாட்கள் திரும்பி வராது என்றும், நான் தகப்பனுடைய வீட்டைவிட்டு வெளிறேப் போகின்றேன் என்றும் தீர்மானம் செய்து கொண்டு, வெளியூருக்கு சென்று தன் நண்பர்களோடு உல்லாசமாக நாட்களை கழித்து வந்தான். ஆண்டுகள் கடந்து சென் றதும், உலகத்தின் உண்மை நிலைமையை உணர ஆரம்பித்தான். அநி யாயமாக போன ஆண்டுகளை நினைத்து அநேக நாட்கள் துக்கித்துக் கொண்டிருந்தான். அவனுடைய நண்பர்களில் ஒருவன் அவனை நோக்கி: நீ எவ்வளவு காலம் இப்படி துக்கித்துக் கொண்டிருப்பாய். நீ உன் தகப்பனுடைய வீட்டிற்கு போய், அவரிடம் மன்னிப்பை கேட்டுக் கொள் என்று கூறினான். அந்த குமாரனானவனோ: நான் செய்த தவறுகளை பார்க்கும் போது, என்னையே நான் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது. அப்பா, எப்படி என்னை ஏற்றுக் கொள்வார் என்றான். அதற்கு அவன் நண்பனானவன்: நீ உன் அப்பாவின் வீட்டிற்கு போனால் ஒழிய, அவர் உன்னை ஏற்றுக் கொள்வாரே இல்லை என்பது உனக்கு தெரியாது. உன்னை தாழ்த்தி, உன் வீட்டிற்கு போ. அவர் உன்னுடைய அப்பா! என்று கூறினான். ஆம் பிரியமான சகோதர சகோதரிகளே, ஜெபம் செய்வது கடினமாக காரியம் அல்ல. ஒருவேளை இந்த உலகிலே உங்கள் அப்பாவோடு பேசுவது கடினமாக காரியமாக இருக்கலாம். ஆனால், நம்முடைய பரம பிதா அன்புள்ளவர். தம்ம ண்டை வரும் தம்முடைய பிள்ளைகளை ஒருபோதும் தள்ளிவிட மாட் டார். இருதயங்களை ஆராய்ந்தறிகின்ற அவர் சமுகத்திற்கு, உண்மை யுள்ள மனதோடு செல்லுங்கள். அவர் உங்களை ஏற்றுக் கொண்டு, உங்கள் வேண்டுதல்களுக்கு நிச்சயமாக செவிகொடுப்பார்.

ஜெபம்:

மனந்திரும்பும் இருதயத்தை புறக்கணியாத அன்புள்ள தேவனே, நான் மிகுதியான என் வாழ்நாட்களை வீணிலே கழிக்காதபடிக்கு உம்மு டைய வார்த்தையின் படி வாழ என்னை நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 59:1