புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 11, 2024)

ஆண்டவரின் ஆளுகை

சங்கீதம் 145:18

தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.


பல விடயங்களில், நான் இருக்க வேண்டிய இடத்திலிருந்து தூரமாக போய்விட்டேன். பல ஆண்டுகள் கடந்து விட்டது. என் வாழ்க்கையிலே அநேக தவறான முடிவுகழளை எடுத்துள்ளேன். அவைகளால் ஏற்பட் டிருக்கும் பின்னடைவுகள் அதிகம். எப்படி இவைகளிலிருந்து விடுதலை அடைவது? எங்கே ஆரம்பிப்பது? எப்படி ஆரம்பிப்பது? என்று ஒரு மனிதனாவன் மனக் குழப்பத்தோடு, தனக்குள் நொந்து கொண்டான். அந்த மனிதனாவன் மட்டுமல்ல, அநேகர், வெளி உலகிற்கு தங்கள் வாழ்க்கை நன்றாகவே ஓடிக் கொண் டிருக்கின்றது என காண்பித்துக் கொள்கின்றார்கள். ஆனால், மனதி லோ தங்கள் தீர்மானங்களை குறி த்து சமாதானமற்றவர்களாக வாழ் கின்றார்கள். உண்மையை கூறி னால் எங்களை நியாயந்தீர்த்து விடு வார்கள் என்ற பயமும். எங்கள் நிலைமையை மற்றவர்கள் அறி ந்தால், தாழ்த்தப்பட்டு போவோம் என்ற சுய கௌரவமும், யாரை நம்பி எதை கூற முடியும் என்ற நம்பிக்கையற்ற நிலைமையும் மனிதர்கள் மனங்களை அழுத்துகின்றதால், மனதினிலே போராட்டமாக இருக்கின் றது. நெடுஞ்சாலையிலே அதிவேகமாக, செல்ல வேண்டிய திசைக்கு எதிராக ஓடிகட கொண்டிருக்கும் கனரக வாகனமானது, சரியான திசை க்கு செல்வ வேண்டும் என்றால், அதன் வேகத்தை தணித்து, நிறுத்தி, திசையை மாற்ற வேண்டும். இல்லை என்று அதன் சாரதி கூறுவானாக இருந்தால், அவன் பிழையான திசையிலே இன்னும் அதிக தூரம் சென் றுவிடுவான். அதுபோலவே, நம்முடைய வாழ்க்கையிலும், தவ றான தீர்மானங்களை சரி செய்வதற்கு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். எங்கே ஆரம்பிப்பது? உங்கள் வீட்டின் அறைக்குள்ளே ஆரம்பிக்க முடியும். எப்படி ஆரம்பிப்பது, முழங்கால் படியிட்டு, நீங்கள் இருக் கின்ற வண்ணமாக உங்கள் வாழ்க்கை ஆண்டவராகிய இயேசு விடம் ஒப்புக் கொடுங்கள். வாழ்க்கையிலே தவறான தீர்மானங்களை எடுத்திரு ந்தால், அவைகளை அறிக்கையிடுங்கள். உண்மையுள்ள இருதய த்தோடு தேவனுடைய வழிநடத்துதலை கேளுங்கள். தம்மை உண் மையாக தேடுகின்ற யாருவருக்கும் சமீபமாயி ருக்கும் தேவன் தாமே, உங்கள் வேண்டுதலை கேட்டு, நீங்கள் நடக்க வேண்டிய வழியை காட்டுவார்.

ஜெபம்:

உண்மை மனதோடு உம்மை தேடுகின்றவர்களுக்கு அருகிலிரு க்கும் தேவனே, என்னுடைய பாவங்களுக்குத்தக்கதாக எனக்கு சரிக்க ட்டால், உம்முடைய கிருபையை பொழிவதற்காக உமக்கு நன்றி. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 34:18