புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 10, 2024)

உங்கள் வாழ்வின் மேன்மை என்ன?

கொலோசெயர் 3:1

நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவை களைத் தேடுங்கள்.


ஒரு வாலிபனானவன் தனது சிறு பிராயத்திலிருந்து ஆலயத்திலே தேவ கானங்களை தனது இனிமையான குரலிலே பாடி பக்தியோடு துதி ஆராதனைகளை வழிநடத்தி வந்தான். சில ஆண்டுகள் கடந் சென்ற போது, தேசிய விளையாட்டு போட்டிகள் ஆரம்பிப்பு விழாவிலே, தேசிய கீதத்தை பாடும்படியான அழைப்பை பெற்றான். பெற்றோருக்கோ எல் லையில்லா ஆனந்தம். தங்கள் உறவினர், நண்பர்களை தொலைபேசி வழியாக அழைத்து தங்கள் சந்தோ ஷத்தை பகிர்ந்து கொண்டாடினா ர்கள். போகுமிடமெல்லாம், அதைக் குறித்து மேன்மையாக பேசி கொண் டார்கள். தங்கள் மகனானவன், பாடும் போது, அவனை தொலைகாட்சி வழி யாக பார்த்து ரசிக்கும்படியும், இணைத்தளத்திலே விருப்புக்களை யும் ஆதரவையும் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார்கள். ஏனெனில், அவர்கள் இருதயத்திலே அவர்கள், தேசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப விழாவிலே பாடுவதற்கு தங்கள் மகனானவனுக்கு கிடைத்த சந்தர்ப்பம் மிகுந்த சிலாக்கியம் என்று கருதினார்கள். சகலகத்தையும் படைத்த உன்னதமான தேவனை ஆலயத்திலே பாடி ஆராதித்து வரும் தங்களுடைய மகனானவனைக் குறித்து தங்களுக்குள் பெருமிதம டைந்திருந்த போதும், அவன் ஆலயத்திலே ஆராதனைகளை வழிநட த்தி வருவதன், மேன்மையையும், அழைப்பையும், சிலாக்கியத்தையும், குறித்து ஒரு போதும்; தங்கள் நண்பர்களோடோ உறவினர்களோடோ அவர்கள் பேசியதில்லை. ஏன் அவர்கள் பேசவில்லை? தங்கள் மகனா னவன், தேவனை ஆராதிப்பதைக் குறித்து அவர்கள் இருதயத்தில் இரு ந்த மேன்மை என்ன? சற்று இந்த சம்பவத்தை சிந்தித்துப் பாருங்கள்! பின்பு, இந்த சம்பவத்தைக் மையமாக வைத்து உங்கள் வாழ்க்கை ஆரா ய்ந்து பாருங்கள். இன்று சில விசுவாச மார்க்கத்தார் எதை தங்கள் வாழ் வின் மேன்மை என்று எண்ணிக் கொள்கின்றாரகள்? பெற்றுக் கொண்ட இரசிப்பு, நித்திய ஜீவனுக்கான அழைப்பு, தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுதல், ராஜரீக ஆசாரியக் கூட்டம் என்று அழைக்க ப்படுதல் போன்ற அழியாத மேன்மைகளா? அல்லது திராள ஆஸ்திகள், உயர்ந்த கல்வி, பெரும் பதவிகள், செல்வாக்குகள், பெயர், புகழ் போன்றவைகளா? எவை உங்கள் இருயத்திலே மேன்மையாக தோன்றுகின்றது?

ஜெபம்:

பூமிக்குரியவைகளையல்ல மேலானவைகளை தேடுங்கள் என்று சொன்ன தேவனே, அழிந்து போகும் இந்த உலகத்தின் மேன்மைகள் என் மனக்கண்களை குருடாக்காதபடிக்கு என்னை காத்து வழிநடத்தவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:19-20