புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 09, 2024)

ஒளியிலே நடவுங்கள்

சங்கீதம் 119:105

உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது


ஒரு குடும்பத்தினர், பாடசாலை விடுமுறைநாட்களிலே, குடும்பமாக சுற் றுலா பயணமொன்றை மேற்கொள்வதற்கு திட்டமிட்டபடி, முன் குறித்த நாளிலே, பஸ் வண்டியிலே ஏறி பரபரப்போடு நீண்ட பயணத்தை ஆரம் பித்தார்கள். பாதிவழியிலே பஸ் வண்டி பழுதடைந்தது, மாலை நேர மானதால், காத்திருக்க கூடாமல், முதலாவது தரிப்பிடத்திற்கு செல்வ தற்கு காட்டு பிரதேசம் வழியாக கால்நடையாக செல்ல வேண்டியிரு ந்தது. சீக்கிரமாக இருள் சூழ்ந்து கொண்டது. போகும் வழியோ தெரி யவில்லை. பயணதிற்கு ஆயத்தம் செய்த போது, டார்ச் லைட்டை (Torchlight) எடுத்துக் கொள்ள மற ந்து போய்விட்டார்கள். அதனால், போகும் வழிதெரியாமலும், பாதை யிலே இருக்கும் பாதகமானவை களை காணமுடியாமலும் தவித் தார்கள். நித்திய ஜீவனுக்கென்று அழைக்கப்பட்ட சகோதர சகோ தரிகளே, வனாந்திரத்தற்கு ஒப்பாக இரு க்கும் இந்த பூமியை கடந்து சென்று கொண்டிக்கும் பரம யாத்திரிக ளாகிய நமக்கு, தேவனுடைய வார்த்தைகளே நம்முடைய கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்ச முமாக இருக்கின்றது. இருளிலிருக்கும் உலகத்திலே நாம் மருண்டு போகமல் வாழ்வதற்கு சத்திய வேதம் இன்றியமையாதது. சில வேளைகளிலே, சில விசுவாச மார்க்கத்தார், பரிசுத்த வேதகமத்தை குறித்து நாம் நன்றாக அறிந்திருக்கின்றோம் என்று கூறுகின்றார்கள். ஆனால் அதின் உபயோகத்தை தங்கள் வாழ்விலே மறுதலிக்கின் றவர்களாக மாறிவிடுகின்றார்கள். எடுத்துக்காட்டாக, சுதாரமும் ஆரோ க்கியமும் என்ற துறையிலே பட்டப்படிப்பை முடித்து, ஆரோக்கியமான வாழ்விற்கு ஆலோசகராக பணிபுரியும் சுகாதார ஆரோக்கி நிபுண ரொருவர், தன் வேலையின் இடைவேகளிலே வெளியே சென்று புகை ப்பிடித்துக் கொள்வதை கண்ட சில வாடிக்கையாளர்கள், அவர் தான் கற்றுக் கொண்டதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும் எதிரான காரிய ங்களை தன் வாழ்விலே நடப்பிப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அதுபோலவே, ஒருவேளை நாம் வேத எழுத்துக்களை நன்றாக அறிந் திருக்கலாம் ஆனால், தகுந்த வேளையிலே அதை நம் வாழ்விலே கடைப்பிடிக்காமல் போவோவென்றால், நாதும் அந்த சுகாதார நிபு ணரைப் போல காணப்படும். எனவே, வாழ்வின் வெளிச்சமாகிய வேத வார்த்தைகளை ஒருபோதும் மறந்து போகாமல், அந்த வெளிச்சத்திலே வாழக்கடவோம்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, பொழுதுவிடிந்து விடிவெள்ளி எங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தல த்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற உமது வசனத்தை கவனித் திருக்க வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தெச 5:5