புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 08, 2024)

ஜெபிக்க மறந்துவிடாதிருங்கள்

எபேசியர் 6:18

எந்தச் சமயத்திலும் சகலவித மான வேண்டுதலோடும் விண் ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணிஇ அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களு க்கா கவும் பண்ணும் வேண்டுதலோ டும் விழித்துக்கொண்டிருங்கள்.


ஒரு தகப்பனானவர், வேலைக்கு செல்லும் தன்னுடைய மகனானவனை தொலை பேசி வழியாக அழைப்பு விடுத்தார். அந்த நேரத்திலே அவன் வேறு அலுவலாக இருந்ததால், 'உன் உத்தியோக அலுவலாக அடுத்த ஊருக்கு போவதற்கு முன்னாதாக என்னோடு பேசுவதற்கு மறந்து போய்விடாதே' என்ற செய்தியை அவனுடைய தொலைபேசியிலே எழுதி அனுப்பி வைத்தார்;. அந்த வார்த்தைகளை வாசித்த மகனான வன், மாலையிலே அப்பாவை தொடர்பு கொள்ளுவேன் என்று தனக்குள் கூறிக் கொண்டு, பய ணத்திற்கு வேண்டிய ஆயத்தங் கள் முழுவதையும் பூர்த்தி செய் தான். காலையிலே எழுந்து, அடு த்த ஊருக்கு போன பின்பு, அப் பாவோடு பேசுவேன் என்று கூறிக் கொண்டு, அவன் அவசர வசரமாக, சக உத்தியோகத்தர் களோடு சேர்ந்து பயணம் செய் தான். அந்த ஊரிலே பெரிதான பிரச்சனை அவனுக்காக காத்தி ருந்தது. அதை அறியாத அவன், அந்த பிரச்சனை யினால், மனமு டைந்து சோர்ந்து போனான். மறுநாளிலே, தன் தகப்பனா னவரோடு தொலைபேசி வழியாக பேசினான். தனக்கு ஏற்பட்ட எதிர் பாராத பிரச் சனை கூறினான். அதற்கு தகப்பனானவர்: மகனே, நீ போவ தற்கு முன் னர் மறக்காதல் என்னோடு பேசு என்று உனக்கு எழுத்தி அனுப்பினேன் அல்லவா? நீ சென்றிருக்கும் ஊரைப் பற்றிய விவகா ரங்கள் யாவை யும் நான் நன்கு அறிந்திருக்கின்றேன். அதைப் பற்றி கூறும்படிக்கே என் னோடு பேசும்படியாக கூறினேன் என்றார். ஆம் பிரி யமான சகோதர சகோதரிகளே, சோதனைக்குட்படாதபடி விழித்திருந்து ஜெபம் பண்ணு ங்கள் என்று நமக்கு எழுதிக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. நாம் அந்த வார்த்தைக்கு கீழ்படிந்து ஜெபிக்கும் போது, ஆவியானவர் நாம் செய்ய வேண்டியவைகளையும, செய்யக் கூடாதவைகளையும் உணர்த்துவார். அடுத்த ஊருக்கு சென்ற மகனானவன், சகல ஆயத் தங்களையும் சிறப்பாக செய்து, தன்னுடைய தகப்பனானவரோடு பேசுவ தற்கு மறந்து போனது போல, நீங்களும் முக்கியமான காரியங்களை செய்ய முன்பு, பல அலுவல்களில் சிக்குண்டு, நாளைக்கு ஜெபம் செய் யலாம் என்று தேவனோடு பேசுவதை பிற்போடாதிருங்கள். ஆவியா வர்தாமே சகல சத்தியத்திலும் உங்களை நடத்திச் செல்ல இடங் கொடுங்கள்.

ஜெபம்:

அன்பின் தேவனே, உயர்விலும் தாழ்விலும், எந்தக் காரியமும் நான் உம்மை துதிப்பதையும்இ, ஜெபம் செய்வததையும் தடுத்து விடாத படிக்கு எனக்கு ஞானமுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தெச 5:17