புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 07, 2024)

கிறிஸ்துவின் சிந்தையை தரித்திருங்கள்

பிலிப்பியர் 2:8

அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.


எதிர்து வந்தார்கள், உயர்த்த வந்தார்கள், தாழ்த்த வந்தார்கள், சோதிக்க வந்தார்கள், கொன்றுபோடும்படி வந்தார்கள், முத்தமிட்டு காட்டிக் கொடுக்க வந்தார்கள், இவையெல்வாவற்றிலும் ஆண்டவராகிய இயேசு பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை செய்ய தம்மை ஒப்புக் கொடுத்தபடியால், யாவற்றையும் ஜெயங் கொண்டார் என்று நாம் பார்த்தோம். பிதாவாகிய தேவனுடைய சித்தம் செய்ய வேண்டும் என்று இலகுவாக சொல்லி விடலாம். ஆனால், தேவ சித்தத்தை செய்து முடிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? தேவ சித்தத்தை நிறைவேற்ற ஆதர வுகளும், உதவிகள் உண்டா? நிச்சயமாக உண்டு! முதலாவதாக, ஆண்டவராகிய இயேசு தம்மை தாழ்;த்தி, தேவ சித்தம் செய்ய கீழ்படிந்தார். அவரைப் போல நாமும் கீழ்படிவும், மனத்தாழ்மையையும் அணிந்து கொள்ளவிடில், தேவ சித்தத்தை நம் வாழ்வில் நிறைவேற்ற முடியாது. ஆண்ட வராகிய இயேசுதாமே, ஆவியானவராலே நடத்தப்பட்டார். அவரிடம் இருந்து அதே ஆவியை, அவருடைய நாமத்தினாலே, பிதாவாகிய தேவன்தாமே நமக்கு கொடுத்தி ருக்கின்றார். நாமும் தேவ ஆவியினாலே நடத்தப்பட இடங் கொடுக்க வேண்டும். தேவ ஆவியானவர்தாமே சகல சத்தியத்திலும் நம்மை வழி நடத்திச் செல்வார். இவை யாவற்றிற்கும் அடித்தளமாக, ஆண்டவ ராகிய இயேசு தாமே, பிதவாகிய தேவனோடுள்ள உறவிலே உறுதியாக இருந்து வந்தார். அவரோடு பேசினார். அவர் கூறும் வார்த்தைகளை கேட்டார். அவர் கூறிய வார்த்தைகளை செய்கின்றவராக இரு ந்தார். அந்த வார்த்தைகள் பரிசுத்த வேதாகமத்தின் வழியாக நமக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. அந்த சத்திய வார்த்தைகளை ஞாயிறு தோறும் தேவ செய்தி வழியாக கேட்கின்றோம். சபையிலே வேதபாடங்கள் வழியாக கற்றுக் கொள்கின்றோம். வாழ்வு தரும் ஜீவ வார்த்தைகளை நாம் கேட்கின்றவர்களாக மாத்திரமல்ல, அதன்படி செய்கின்றவர்களாகவும் நாம் அனுதினமும் முன்னேறிச் செல்ல வேண் டும். தேவ குமாரனாகிய இயேசு வழியாக பிதாவாகிய தேவனுடைய குமாரர் குமாரத்திகளாகப்பட்ட நாமும், அனுதினமும் ஜெபி க்கின்ற வர்களாக காணப்பட வேண்டும். இப்படியாக நாம் நம் வாழக்கையை கிறிஸ்துவின் சிந்தையுடையவர்களாக மாற்றிக் கொள்ளும் போது, உலகத்தை ஜெயிக்கின்றவர்களாக இருப்போம்.

ஜெபம்:

பெலன் தந்து நடத்தும் தேவனே, உம்முடைய வார்த்தையை ஆர்வத்துடன் கேட்கின்றவர்களாகவும், அதன்படி செய்கின்றவர்களாகவும் வாழ எங்களுக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இர ட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 15:7