புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 06, 2024)

முடிவு பரியந்தம் நிலைத்திருங்கள்

யோவான் 4:34

நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜன மாயிருக்கிறது.


ஒரு விசுவாசியானவன், நன்மையான காரியங்களை உடன் சகோதர சகோதரிகளுக்கும், அயலவருக்கும் செய்ய வேண்டும் என்ற நல் மன தையுடையவனாக இருந்தான். அவனுடைய எண்ணங்கள் நன்மை யானது என்று மற்றவர்கள் அறிந்திருந்தாலும், அவைகளை செய்ய முடி யாதபடிக்கு, சில அதிகாரங்களாலும், சில உறவினர் நண்பர்களாலும், சில மத குருக்களாலும், சில வேளை களிலே சொந்த குடும்பத்தினரா லும் தடைகள் வருவதை கண்ட போது, இவர்கள் இலவசமாக கிடைக்கும் நன்மைக்கும் எதித்ர்து நிற்கின்றார்களே என்று ஆச்சரிய ப்பட்டு, மனம் சோர்ந்து போனான். பிரியமான சகோதர சகோதரிகளே, ஒருவேளை இப்படியாக சூழ்நி லைகளை நீங்களும் எதிர்நோக்கி யிருக்கலாம், ஆனால் மனம் சோர்ந்து, உங்கள் நல்ல சுபாவங்களை விட்டு விலகாதிருங்கள். ஆண்டவராகிய இயேசு தம்மை தாழ்த்தி மனித ரூபம் எடுத்து இந்த பூவுலகிற்கு வந்து, எப்படி வெற்றி வாழ்க்கை வாழ்வதென்பதை வாழ்ந்து காட்டினார். அவர் எல்லாவிதத்திலும் நம் மைப் போல சோதிக்கப்பட்டார். ஆனால், அவர் சோதனையில் அகப் பட்டு, இழுப்புண்டு போகாமல், பாவம் ஏதும் செய்யாமல், யாவற் றையும் ஜெயம் கொண்டார். அவர் நன்மை செய்கின்றவராக சுற்றித் திரிந்தபோதும், அதிகாரங்களிலுள்ளவர்களும், ஊரிலுள்ள சிறப்பு குடிம க்களும், ஆசாரியர்களும், பொது மக்களில் நன்மை பெற்றவர்களும் அவரை எதிர்த்து நின்றார்கள். சொந்தக் குடும்பத்தினரும் அவரைக் குறித்து சந்தேகப்பட்டார்கள். அவரோடு உணவுண்டவர்கள்,அவரை மறு தலித்து, நண்பன் வேடம் போட்டு, காட்டிக் கொடுத்தார்கள். யாவராலும் அவர் புறக்கணிகக்கப்பட்டிருந்தார். ஆனாலும், அவர் எல்லா சூழ்நிலை களும் மேற்கொண்டு வெற்றி சிறந்தார். எப்படியாக அவர் ஜெயம் கொண்டார்? யார் அவரை எதிர்த்து நின்றாலும், அவரோ ஒவ்வொரு காரியத்திலும் தம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை நிறை வேற்றுவதையே நோக்கமாக கொண்டார். அவரைப் போலவே நாமும், பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை நம்முடைய வாழ்வில் நிறைவே ற்றுவதையே பிரதானமாக நோக்கமாக கொண்டு, முடிவு பரியந்தம் அதில் நிலைநிற்கும் போது, நாமும் வெற்றி சிறக்கின்றவர்களாக காணப்படுவோம்.

ஜெபம்:

வெற்றி சிறக்கப் பண்ணும் தேவனே, எதிர்ப்புக்கள் ஏளனங்கள் நம்முடைய வாழ்க்கையில் வந்தாலும், தளர்ந்து போகாமல்இ உம்முடைய சித்தத்தை செய்வதில் நிலைநிற்க எனக்கு பெலன் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 2:7