புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 05, 2024)

சுமை சுமந்து சோர்ந்து இருப்பவர்கள்

மத்தேயு 11:28

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக் கிறவர்களே! நீங்கள் எல்லா ரும் என்னிடத்தில் வாருங் கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்


ஏன் இத்தனை தொல்லைகள்? ஏன் இத்தனை கஷ்டங்கள்? என்று கூறி, தாங்கள் வாழும் பிரதேசங்களையும், உறவுகளையும், நண்பர்களையும், தொழித்துறைகளையும் மனிதர்கள் மாற்றிக் கொள்கின்றார்கள். ஏன் அப்படி செய்கின்றார்கள்? ஏதோ ஒரு வகையில் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தவிர்த்து கொள்ளலாம் என்று எதிர்பார்கின்றார்கள். அப்படியாக தங்கள் வாழ்வில் மாற் றங்களை உண்டு பண்ணுவதால், மனிதர்கள் சில பிரச்சனைகளை தவி ர்த்துக் கொள்கின்றார்கள். ஆனால், அவை நீண்ட நாட்களுக்கு நீடித்தி ருப்பதில்லை. சீக்கிரமாக, புதிய இட த்திலே, புதிய உறவுகளிலே, புதிய நண்பர், தொழித்துறைகள் வழியாக புதிய பிரச்சனைகள், புதிய வடிவ மைப்பிலே மனிதர்களை பின்தொ டர ஆரம்பித்து விடுகின்றது. இந்த உலகத்திலே மனிதர்களுக்கு வரும் நோய்களுக்கு, மருத்துவர்கள் புதிய புதிய மருந்துகளை கண்டு பிடிக்கி ன்றார்கள். அந்த மருந்துகளினாலே நோயாளிகளுக்கு பிரயோஜனங்கள் உண்டு என்பதை எவரும் மறு தலிப்பதில்லை. ஆனால், பின்விளைவு கள் இல்லாத மருந்துகள் இந்த உலகத்திலே இல்லை. குறிப்பிட்ட நோயை நீக்க எடுக்கும் முயற்சிகள், வேறு சில நோய்களை உண்டு பண்ணிவிடுகின்றது. முன்பு எனக்கிருந்த நோயையோடு ஒப்பிட்டு பார்க் கும் போது, தற்போது எனக்கிருக்கும் பின்விளைவுகளை முன்பு எனக்கி ருந்த நோயைவிட பரவாயில்லை என்று மனிதர்கள் மனதிருப்திய டைந்து கொள்கின்றார்கள். மனிதர்கள் உயிர் வாழும்வரை இந்த வாழ் க்கை வட்டத்திற்கு முடிவில்லை. அது போலவே, வாழ்க்கiயில் ஏற்ப டும் பிரச்சனைகளுக்கு மனிதர்களால் உண்டான தீர்வுகளால் வரும் பலன் அற்பமே. மனித அறிவினாலே எடுக்கப்படும் தீர்மானங்கள், நன் மையாக தோன்றினாலும், பின்விளைகள் இல்லாமற் போவதில்லை. ஏவாளானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று விலக்கப்பட்ட கனிகளை புசித்ததால், நித்திய மரண மானது பின்விளைவாகிற்று. என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்து மாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று ஆண்டவர் இயே சுதாமே இளைத்து போனவர்களை அழைக்கின்றார். அவரிடத்தில் உங் கள் வாழ்க்கையை ஒப்புக் கொடுங்கள்.

ஜெபம்:

அன்பின் பரலோக தேவனே, நீர் என்னை பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்ளும்படிக்கு உம்மையே உறுதியாய்ப் மனதாரப் பற்றிக் கொண்டு, உம்மையே நம்பியிருக்கிக்கும்படி என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 26:3