தியானம் (ஆனி 04, 2024)
வஞ்சிக்கும் தந்திரங்கள்
சங்கீதம் 91:3
அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்.
ஒரு ஊரிலே உத்தமனாக வாழ்ந்து வந்த மனிதனானவனொருவனை, குற்றத்தில் அகப்பபடுத்த வேண்டும் என்று அந்த ஊரிலிருந்த அவன் எதிரியானவனொருவன் தீர்மானம் செய்து கொண்டான். அவனை சட்டரீதியான குற்றத்தில் அகப்படுத்துப்படி, தன்னுடைய நண்பனொரு வனை நலன் விரும்பியை போல, அவன் வாழும் தெருவிற்கு அனுப்பி, துரிதமாக பணத்தை சம்பாதிக்க சில வழிகளை குறித்து ஆலோசனை வழங்கினான். ஆனால் அந்த யுத்தி பலனளிக்கவில்லை. பின்னர்;, துஷ;ட ர்களை கொண்டு அவனை பயமு று த்தும்படி மிரட்டல்களை விடுத் தான். சில வன்செயல்களை செய்வித்;தான் அவைகனை கண்டும் அந்த உத் தமனாக வாழ்ந்த மனிதனான வன் அசந்து போகவில்லை. எனவே, அவ னோடு நீண்டகாலமாக நல்ல நண்பனாக இருந்த வேறொருவனை, அழைத்து, அவனுக்கு அதிக பணத் தை கொடுத்து, அந்த உத்தமனா னனோடு நட்பாக நடந்து, அவனை குற் றத்தில் மாட்டிக் கொள்ளுக் படிக்கு, வஞ்சகமாக யுக்திகளை நடப்பித் தான். தன் நண்பன் தனக்கு துரோகம் செய்யமாட்டான் என்று அவனை நம்பியிருந்த உத்தமனா னவன், அந்த நண்பனினாலே வஞ்சிக்கப்பட்டான். பிரியமான சகோதர சகோதரிகளே, இந்த உலகத்திலே வாழும் வரை யும் நமக்கு போரட்ட ங்கள் உண்டு என்று பரிசுத்த வேதாகமம் கூறுகி ன்றது. இன்றைய உலகிலே போரட்டங்கள் என்று கூறும் போது, மனிதர்கள் ஆர்பாட்டங்க ளையும், ஊர்வலங்களையும், கலவரங்களையும், சண்டைகளையும் குறி த்து சிந்தித்துக் கொள்கின்றார்கள். நமக்கு வரும் போரட்டங்கள் அப்படி ப்பட்டவைகளல்ல, அவ்வண்ணமாக நாம் மாம்சத்திலே போராடுகி ன்ற வர்களுமல்ல. மேற்கூறப்பட்ட சம்பவத்திலுள்ளது போல, ஆவிக்குரிய போராட்டங்கள், நமக்கு பல வழிகளிலே வருகின்றது. அவற்றில் ஒரு சிலவற்றை நாம் பார்க்கும் போதே அவை தீமை என்பதை உடனடியாக இனம் கண்டு கொள்கின்றோம். ஆனால், நம்முடைய கண்களுக்கு செம் மையாக தோன்றும் வழிகள் பல உண்டு. நாம் அவற்றை உள்வாங்கும் வரை நமக்கு நன்மையானவைகளைப் போல காட்சிளிக்கும். அதன் பின் னர், அதனால் உண்டாகும் விளைவுகளோ பாதகமானவைகளாக இருக் கும். எனவே, தேவனுடைய வார்த்தைகள் சமரசம் செய்யமலும், சூழ்நி லைகளுக்கு ஏற்றபடி மாற்றாமலும், அந்த வார்த்தைகளின் வெளிச்சத் திலே நடக்க உங்களை பழக்கிக் கொள்ளுங்கள்.
ஜெபம்:
மனிதர்களுடைய மனதின் யோசனைகளை அறிந்த தேவனே, வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமாவை கண்ணிகளுக்கு நீர் தப்புவித்து காத்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - சங்கீதம் 124:1-8