புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 02, 2024)

'ஒரு மணிநேரப் பேச்சு'

மத்தேயு 7:17

அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்.


ஒரு ஊரிலே நடந்த உற்பத்திப் பொருட்களின் கருத்தரங்கொன்றிலே, ஒரு மணி நேரம் உரையாற்றுpய மனிதனொருவன், அந்த ஊரிலுள்ள மூப்பர்கள், அதிகாரிகள் மத்தியிலே பேசும் போது, அவர்களை நோக்கி: 'நான் விற்பனையாளராக உங்க ளிடத்தில் வரவில்லை. ஆனால் இந்த உற்பத்திப் பொருளின் பாவ னையாளராக உங்கள் நடுவே வந்திருக்கின்றேன்' என்று வரு கை தந்திருந்தவர்களின் உணர் வுகளை தூண்டும் வகையிலே, அடுக்கு மொழியிலே குறிப்பிட்ட உற்பத்திப் பொருள் ஒன்றைக் குறித்து உரையாற்றினான். சில கிழமைகள் கடந்து சென்றதும், அந்த ஊருக்கு உரையாற்ற வந்த மனிதனாவன், அந்த உற்பத்திப் பொருளின் இரகசிய முகவர் என்றும், அதை சந்தைப் படுத்துவதினால், கணிசமான தொகைப் பணத்தை முகவர் சேவைக் கட்டணமாக (Agent's Commission) பெற்றுக் கொள்கின்றான் என்பதை அறிந்து கொண்டார்கள். பிரியமான சகோதர சகோதரிகளே, 'கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயி ருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத் தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.' என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். இன்று இணையத்தளத்தின் வழியாக போதனைகள் மலிந்து போய் இருக்கின்றது. எனவே நீங்கள் அறியாத போதனைகளை குறித்து எச்சரிக்கையாயிருங்கள். எப்படி நாம் எச்சரிக்கையாக இருக்க முடியம்;? 'அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூ ண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது. கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடு க்கமாட்டாது.' எனவே ஒருவரின் ஒரு மணிநேர பேச்சிலும், அவர்; தன் னைக் குறித்து தானே கூறும் அனுபவ சாட்சிகளில் முற்றாக மயங்கி, உங்கள் வாழ்விலே முக்கிய தீர்மானங்களை எடுத்தக் கொள்ளாமலும், கற்றுக் கொண்டவைகளை விட்டு விலகாமலும், அவருடைய பேச்சுக் களை வேத வார்த்தையின் வெளிச்சத்தில் ஆராய்ந்து பார்ப்பதுடன், அறியாத அந்நிய பேச்சாளரிகளின் வாழ்க்கையின் அனுபவ சாட்சி களை அவர்களை நன்கு அறிந்தவர்கள் வழியாக உறுதி செய்து கொள் ளுங்கள். உங்களுக்குள் வாசம் செய்யம் தூய ஆவியானவர் உங்களை வழிநடத்தி செல்வாராக.

ஜெபம்:

என்னை நித்திய வாழ்விற்கு அழைத்த தேவனே, மனிதர்களின் பேச்சிலே நான் இழுப்புண்டு போகாதபடிக்கு,உம்முடைய வார்த்தையிலே நிலைத்திருக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 3:1