புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 01, 2024)

நன்மையாக தோன்றுபவைகள்

நீதிமொழிகள் 19:20

ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.


ஒரு ஊரிலே இயங்கி வந்த சனசமூக நிலையத்திலே இருந்த அங்கத்தவர்கள் யாவரும், ஐக்கியத்துடனும், கருத்துடனும், ஊர் மக்களின் சேம நலனுக்கா உழைத்து வந்தார்கள். சில ஆண்டுகள் சென்றதும், தூர தேசத்திலிருந்து அந்த ஊருக்கு வந்த மனிதனனொருவன், உடையிலும், நடையிலும், பேச்சிலும் பண்புள்ளவளாகவும், கற்றவனாகவும், யோக்கமுள்ளவனாக காண்பித்துக் கொண்டான். அந்த ஊரிலுள்ள சில குடும்பங்களை அணுகி, நீங்கள் பிள்ளைகளை வெளியூருக்கு அனுப்பு வதற்குரிய வாய்ப்பு உண்டு, ஆனால் உங்கள் முற்பணமாக ஒரு சிறிய தொகையை தர வேண்டும் என்று பத்திற்கு மேற்பட்ட குடும்பதினரிடம், பணத்தை பெற்றுக் கொண் டார். அந்த ஊரின் சனசமூக நிலைய தலைவர், மக்களை நோக்கி, இப்படியாக ஊரறியாதவர்களு டன் ஒப்பந்தம் செய்து, பணத்தை விரயமாக்குகின்றீர்களே என்று அவர்களை கடிந்து கொண்டார். ஊர் மக்களில் சிலரோ, சனசமூக நிலையத்தின் தலைவரோடு கோபம் கொண்டு, அவரை நோக்கி: ஊருக்கு நன்மை செய்ய ஏற்படுத்தப்பட்;ட நீங்கள், ஊரைத் தேடி வந்த பெரும் நன்மையை குழப்பப் பார்க்கின்றீர்களே என்று கூறி அவரைவிட்டு பிரிந்து போனார்கள். சில மாதங்கள் சென்ற பின்பு, வெளியூரிலிருந்து அந்த ஊருக்கு வந்த மனிதனானவன், ஏமாற்றுக்காரன் என்பதை அறிந்து, தாங்கள் இவ்வளவு சீக்கிமாய் வஞ்சிக்கப்பட்டு போனோம் என்று கவலையும், கோபமும் அடைந்தார்கள். பிரியமான சகோதர சகோதரிகளே, வஞ்சிக்கப்பட்டு போவதைக் குறித்து பரிசுத்த வேதாகமத்திலே பல எச்சரிப்புக்கள் கொடுக்கப்பட்டிருப்பதை காணாலாம். ஆதியிலே ஏதேன் தோட்டத்திலே நடந்த வஞ்சகத்தைப் போலவே, வஞ்சகமானது பல வடிவங்களிலே விசுவாசிகளை நோக்கி வருகின்றது. சில வேளை களிலே, தங்கள் ஜெபத்திற்கு பதில் கிடைத்தது என்று சில விசுவாசிகள், காரியங்களை வேத வசனத்தின்படி ஆராய்ந்து அறியாமல், அந்நியர்களின் வஞ்சக வலைக்குள் அகப்பட்டு விடுகின்றார்கள். இத னால் தாங்களே தங்கள் வாழ்விலே வேண்டப்படாத பாதகமான பின்விளைவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். எனவே, தேவ ஆலோ சனைகளை தள்ளிப் போடாதிருங்கள். வேத வார்த்தைகளின் வெளிச் சத்திலே, காரியங்களை ஆராய்ந்து நிதானித்து அறிந்து கொள்ளுங்கள். ஜெபத்திலே தரித்திருந்து தீர்மானங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

வழிநடத்தும் நல்ல தேவனே, மாம்ச கண்களுக்கு நன்மையாக தோன்றும் காரியங்களிலே நான் இழுப்புண்டு போகாதபடிக்கு, வேத வார்த்தைளின் வெளிச்சத்திலே காரியங்ளை ஆராய்ந்து அறிந்து கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 11:3