புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 30, 2024)

யாருக்கு செவிகொடுப்பது?

அப்போஸ்தலர் 4:19

தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ என்று நீங்களே நிதானித்துப்பாருங்கள்.


ஆதி அப்போஸ்தலரின் நாட்களிலே, ஆண்டவராகிய இயேசுவின் சீஷர்கள், ஆண்டவராகிய இயேசுவின் நாமத்திலே அற்புதங்களை செய்து, அவரே வாக்களிக்கப்பட்ட மீட்பர் என்றும், அவருடைய நாமத்தினாலே மனித குலத்திற்கு உண்டான இரட்சிப்பை குறித்து ஜனங்களுடனே பேசி க்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும் அதிகாரிகளும் அவர்களிடத் தில் வந்து, அவர்கள் ஜனங்களுக்கு இயேசுவின் நாமத்தைக் குறித்து உப தேசிக்கிறதினாலும், உயிர்தெழுத லைக் குறித்து பேசுவதினாலும், அவர் மரித்தோரிலிருந்து உயிர்தெழுந் ததை பிரசங்கித்ததினாலும், சினங் கொண்டு, அவர்களைப் பிடித்து, காவ லில் வைத்தார்கள். மறுநாளிலே கூட் டங்கூடி, அவர்களை நடுவே நிறு த்தி: நீங்கள் எந்த வல்லமையினாலே, எந்த நாமத்தினாலே, அற்புதங்களை செய்தீர்கள் என்று கேட்டார்கள். அப் பொழுது பேதுரு பரிசுத்த ஆவியினாலே நிறைந்து, அவர்களை நோக்கி: உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலி ருந்து எழுப்பப்பட்டவருமாயிருக்கிற நசரேயனாகிய இயேசுகிறிஸ்து வின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சொஸ்தமாய் நிற்கிறானென்று உங்களெல்லாருக்கும், ஜனங்களெல்லாருக்கும் தெரிந் திருக்கக்கடவது. என்று கூறினார். ஆசாரியர்களும், அதிகாரிகளும் இயே சுவின் நாமத்தைக்குறித்து எவ்வளவும் பேசவும் போதிக்கவும் கூடா தென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.இன்றைய நாட்க ளிலே, உலகத்தார் மத்தியில் மாத்திரம் அல்ல, சில விசுவாச மார்க்கத்தார் மத் தியிலும் மனிதர்களை உள்வாங்கும் பொருட்டு, இயேசுஎஎன்ற நாம த்தை பேசாதிருக்கின்றார்கள். நவீன போக்கு என்ற ரீதியிலே சபை களிள் அமைப்பு மாற்றப்படுவது மாத்திரமல்ல, இயேசு என்ற நாமம் கொண்ட வசனங்களை காண்பதும் மிகவும் அரிதாகவே இருக்கின்றது. அன்றைய நாளிலே, தேசத்திலிருந்த ஆசாரிகளும், அதிகாரிகளும், இயேசு என்ற நாமத்தை தணிக்கை செய்ய முயன்றார்கள் ஆனால் சீஷர்களோ, மனிதர்களுடைய அங்கீகாரத்தைவிட, உபத்திரவங்கள் வந்தாலும் தேவ சித்தத்தை நிறைவேற்றுவதையெ மேன்மையாக எண்ணினார்கள். இன்று உங்கள் மனநிலை எப்படியாக இருக்கின்றது? நாம் இரட்சிக்கப்படு ம்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.

ஜெபம்:

பரலோக தேவனே, என்னுடைய சொந்த யுக்திகளால் தேவ காரியங்களை செய்வதற்கு வகை தேடாமல், உம்முடைய வார்த்தையின் படி நான் தேவ சித்தத்தை செய்து முடிக்க என்னை பெலப்படுத்தி நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 1:16