தியானம் (வைகாசி 29, 2024)
'பின்விளைவுகள்'
யோவான் 6:38
என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்.
ஒரு ஊரிலே இயங்கி வந்த, உற்பத்திசாலையின் முதலாளியானவன் உற்பத்திசாலையின் விவகாரங்களை நீதியும் நியாயமுமான முறையிலே நடத்தி வந்தான். ஒருநாள் அவன் தன்னுடைய மகனானவனை நோக்கி: நீ நாளை தொழிற்சாலைக்குக் போய், அங்கே பல வருடங்களாக மேய் பார்வைகயானாக வேலை புரிந்து வரும் உழியனை பதவி இறக்கம் செய்து, சில வருடங்களாக தொழி லாளியாக வேலை புரிந்து வரும் ஊழி யனை, மேற்பார்யாளராக பதவி உய ர்வு செய் என்றும் கூறினார். அதை கேட்ட மகனானவன், இது எப்படி யாக முடியும் என்று, சற்று தயக்க மடைந்தவனாக, தன் தகப்பனான வரை நோக்கி: தந்தையே, அந்த மேய் பார்வையாளன், பல ஆண்டுகளாக வேலை பார்த்து வருகின்றான். அவ னுக்கு கீழே பணி புரியும் தொழிலாளர்களில் சிலர் அவனுடைய நண்பர் களும், உறவினரும் அங்கே அவனோடு வேலை செய்கின்றார்கள். இப் படியான மாற்றங்கள், உற்பத்திசாலையிலே பாதகமான பின்விளைவு களை உண்டு பண்ணலாம் என்று கூறினான். அதற்கு தகப்பனானவர்: மகனே, நீ கூறுவதில் கருத்து உண்டு. இந்த மாற்றம் என்னுடைய பூரண மனவிருப்பம் அல்ல ஆனால் இந்த மாற்றத்தை இப்போது செய்ய வேண்டிய நேரமாக இருக்கின்றது. எனவே, நான் சொல்லுகின்றபடி செய், அதன் பின்விளைவுகள் அனைத்தையும் நான் பார்த்துக் கொள் வேன் என்றார். ஆம் பிரியமான சகோதர சகோதரிகளே, பிதவாகிய தேவ னுடைய சித்தத்தை நம்முடைய வாழ்வில் நடப்பிப்பதென்பன் கருபொ ருளை நாம் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். பிதவாகிய தேவ னுடைய சித்தம் செய்வதென்பது, விசுவாசியாவன் தன்னுடைய விருப் பங்களை செய்வதென்பது பொருளல்ல. எப்போதும், மற்றவர்கள் விரு ம்பும் கிரியைகளையோ செய்வதோ அல்லது அவர்கள் கேட்க விரும் பும் மனதிற்கினிய சொற்களை பேசுவதோதென்பதோ இல்லை. சில வேளைகளில் நம்முடைய வாழ்விலும், பிதாவாகிய தேவனுடைய சித்த த்தை நடப்பிப்பதால் வரக்கூடிய பின்விளைவுகளை குறித்து, நாம் பய ந்து கலக்கமடைவதுண்டு. ஆண்டவராகிய இயேசுதாமே மதபற்றுள்ள வர்களின் உண்மையான நிலைமையை எடுத்து கூறிய போது, அவர்கள் மூர்க்கம் கொண்டு அவரக்கு கல்லெறிய வேண்டும், அவi கொல்ல வேண்டும் என்று முற்பட்டார்கள், ஆனால், மரிக்க வேண்டி நேர்ந்தா லும் பிதாவின் சித்தம் செய்வதையே அவர் மேன்மையாக எண்ணினார்.
ஜெபம்:
சர்வ வல்லமையுள்ள தேவனே, மனிதர்களின் முகஸ்திகளை பெற்றுக் கொள்வதைவிட உம்முடைய சித்தத்தை நிறைவேற்றி முடிப்பதையே எப்போதும் மேன்மையான எண்ணிக் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - லூக்கா 22:42