தியானம் (வைகாசி 28, 2024)
யாரோடு ஐக்கியம்?
லூக்கா 6:36
ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.
இவர்களுடைய ஆசை விருப்பங்களும் போக்குகளும் எங்களுடைய குடும்பத்தின் போக்கிற்கு ஒத்துப்போகின்றது, எனவே நாங்கள் இவர்களோடு நட்பாயும், போக்குவரத்துமாக இருக்கின்றோம் என்று ஒரு குடும்பத்தினர், சபையிலுள்ள இன்னுமொரு குடும்பத்தினரோடு ஐக்கியமாயும், ஆதரவாயும் இருந்துவந்தார்கள். இது பாராட்டத்தக்க வேண்டிய விடயமாக இருக்கின்றது. ஆனாலும் நம்முடைய வாழ்வானது, நாம் போட்டுக்கொண்ட குறுகிய வட்டத்திற்குள் மட்டுமல்ல, ஆண்ட வராகிய இயேசுவின் வார்த்தையின் வட்டதிற் குள் இருக்க வேண்டும். 'உங்களைச் சிநேகிக்கிறவர்களை யே நீங்கள் சிநேகித்தால், உங்க ளுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகி க்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே. உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே. திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன் கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடு க்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கி றார் களே.' என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். அதுமட்டும ல்ல, நம்முடைய ஐக்கியத்தின் மையப் பொருள் என்ன? பொதுவான கல்வி, வேலை, அந்தஸ்து, விளையாட்டு துறை நாட்டங்கள், பொழுது போக்கு போன்றவற்றை மையமாக கொண்டதாக இருந்தால், அவை இந்த உலகத்திற்கேற்ற மேன்மையான ஐக்கியமாகவே இருக்கும். அப் படியிருக்காமல், நம்முடைய ஐக்கியமானது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை மையமாக கொண்டதாக இருக்க வேண்டும். அப்பொழுது, அந்த ஐக்கியமானது பரலோகத்திற்குரிய மேன்மையுள்ளதாக இருக்கும்;. எனவே, ஒருவர் நன்மை செய்தால் மாத்திரம் நான் அவ னுக்கு நன்மை செய்து, அவனோடு ஐக்கியமாக இருப்பேன், எனக்கு தீமை செய்கின்றவன், அவன் உடன் சகோதரனாக இருந்தாலும், நான் நன்மை செய்ய மாட்டேன் என்ற எண்ணமுடையவர்களாக இருக்கக் கூடாது. நாம் கிறிஸ்துவோடு ஐக்கியமாக இருந்தால், நன்மை செய்து பாடநுபவிக்கின்ற எண்ணமுடையவர்களாக இருக்க வேண்டும். நம்முடைய இரக்கமா னது இந்த உலகத்திற்கு ஏற்புடையதாக இருக்காமல், பிதவாகிய தேவ னுடைய பார்வையிலே ஏற்புடையதாக இருக்கும்படி வளர்ந்து பெருகு வோமாக.
ஜெபம்:
அன்பின் பரலோக பிதாவே, நான் தீமையினாலே வெல்லப்படா மல், தீமையை நன்மையினாலே வெல்லுகின்ற வாழ்க்கை வாழு ம்படிக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - ரோமர் 12:19-21