புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 27, 2024)

காலத்தை நிதானித்து அறியுங்கள்

எபேசியர் 5:16

நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.


அவனவன் தன் தன் மனதிற்கு விருப்பமானதை செய்ய வேண்டும். தன் வாழ்வின் கனவை அவனவன் பின்பற்ற வேண்டும் என்று கொள்கை பெருகிக் கொண்டிருக்கும் உலகிலே நாம் வாழ்ந்து வாழ்கின்றோம். கல்வித் துறையிலே நாட்டமுடையவன் அதை தொடரட்டும். வியாபா ரத்திலே விரும்பமுள்ளவன் அதை செய்யட்டும். விளையாட்டுத் துறை யிலே சிறந்து விளங்குப வன் அவன் அழைப்பை நிறை வேற் றட்டும். இப்படியாக ஒவ்வொரு துறையையும் பிரித்து வைத்த மனி தனானவன், தேவ பக்தியைiயும் அவற்றில் ஒரு துறையாக எண் ணிக் கொள்கின்றான். இவ்வ ணமாகவே இளம் சந்ததிக்கும் அதை கற்றுக் கொடுத்து வருகின்றார்கள். இன்று மனிதர்கள் அதை செய்தால் பாவமா? இதை கற்பதில் தவறென்ன? அப்படி வியாபாரம் செய்தால் கடவுள் கோபித்து விடுவாரோ? என்று கூறிக் கொள்கின் றார்கள். அவர்கள் மாத்திரம் அல்ல, சில விசுவாசிகளும் கூட அவர்க ளோடு இணைந்து, தங்கள் இதய வாஞ்சைகளை நியாயப்படுத் துவத ற்கு, கேள்விக்கு மேல் கேள்விகளை கேட்டுக் கொள்கின்றார்கள். பரிசு த்த வாழ்வு வாழும்படிக்கு பிறப்பதற்கு முன்னமே முன்குறிக்க ப்பட்ட சகோதர சகோதரிகளே, ஒரு மனிதனானவன், எந்த துறையிலி ருந்தா லும், பரலோகம் செல்வதற்கு அவன் பின்பற்ற வேண்டிய வழி ஒன்று உண்டு. சத்தியம் ஒன்று உண்டு. அந்த வழியிலே ஜீவன் உண்டு. கர்த் தராகிய இயேசுவே பரலோகத்திற்கு செல்லும் வழியாக இருக்கின்றார். கர்த்தராகிய இயேசுவை அறிந்தவன், கர்த்தாவே! கர்த்தாவே! என்று அவரை அழைப்பதினால் நித்திய ஜீவனை அடைவதில்லை. மாறாக, பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை இந்த பூவுலகிலே நிறை வேற்றுபவனே, நித்திய ஜீவனை அடைவான் என்ற கர்த்தராகிய இயேசு கூறியிருக்கின்றார். இன்று, பொதுவாக பல துறைகளை நாடும் மனிதர் களின் குறுகிய காலத்திலே பணத்தையும் புகழையும் பெருக்கிக் கொள் வதையே நோக்கமாக கொண்டிருக்கின்றார்கள். அதனால், தாங் கள் தெரிந்து கொண்ட துறையிலே மிகவும் ஆர்வம் காட்டுகின்றார்கள். திரா ளாக செல்வத்தில் களிகூருகின்றது போல, உம்முடைய சாட்சிகளின் வழி யிலே நான் களிகூறகின்றேன் என்று ஒரு தேவ பக்தன் பாடியிருக்கி றான். யாவருக்கும் ஒரு வாழ்வு இவ்வுலகிலே கொடுக்கப் பட்டிருக்கி ன்றது. அதை தேவ வார்த்தையின் வழியிலே வாழ்வதற்கு தன்னை ஒப்புக் கொடுக்கின்றவன், பாக்கியமுள்ள மனிதனாக இருக்கின்றான்.

ஜெபம்:

பரம ஞானத்தை தந்து நடத்தும் தேவனே, ஞானமற்றவர்களை ப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் உம்முடைய வழியிலே நடந்து என் வாழ்நாட்களை பிரயோஜனப்படுத்திக் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ஏசாயா 55:6