புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 26, 2024)

உலக தத்துவங்கள்

சங்கீதம் 112:1

அல்லேலூயாஇ கர்த்தரு க்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கிய வான்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த மனிதனானவன், தன் சின்ன வயதிலிருந்தே கல்வி கற்பத்தில் மிகவும் ஆர்வமுள்ளவான இருந்து வந்தான். பட்ட படிப்புக்களை முடித்த பின்பும், ஒன்றின் பின் ஒன்றாக பல்வேறு கலைகளையும் கற்றுக் கொண்டிருந்தான். சிறப்பான உத்தியோகத்திலே அமர்ந்த அந்த மனிதானாவன், பல பதிவியுயர்வுகளை பெற்று, பல்வேறு முதலீடுகளை செய்து, ஐசுவரியத்தை தினமும் பெருக்குவதற்காக அயராது உழைத்து வந்தான். அவன் வயது கடந்து போவதால், அவனுடைய உறவினர், நண்பர்களில் சிலர், அவனடைய திருமணத்தைபற்றி அவனை விசாரித்தார்கள். அதற்கு அந்த மனிதனானவன், சிரித்தபடி அவர் களை நோக்கி: மனைவியையும் திரும ணத்தையம் வேண்டிய நேரம், வேண்டிய பிரகாரமாக பெற்றுக் கொள்ள லாம். அவற்றிற்கெல்லாம் அடிப்படையானது பணம். ஆனால், பணத்தை வேண்டிய நேரம், வேண்டிய பிரகாரம் உழைத்துவிட முடியாது. காற்றுள்ள போது தூற்றிக் கொள்ள வேண்டும், என்று தன் சொந்த வாழ்க்கைத் தத்துவத்தை பெருமிதமாக கூறிக் கொண்டான். பிரியமான சகோதர சகோதரிகளே, அழுக்குகள் இருக்கும் இடத்தை நாடி ஈக்கள் வருவது போல, பணத்தை விரும்புவர்கள், அது யாரிடம் இருந்தாலும் அதை நாடிச் செல்ல ஆயத்தமுள்ளவர்களாக இருப்பார்கள். அந்த உறவின் ஐக்கியம் அன்பு அல்ல, மாறாக பண ஆசையே அந்த உறவின் ஐக்கியமாக இருக்கும். மெய்யான அன்பில் நிபந்தனைகள் ஏதும் இருக்காது. ஆனால், இன்று மிகையாக செல்வத்தையுடையவர்கள் திரு மணம் செய்து கொள்ள முன்பே, அந்த திருமணத்தை எப்படி உடைக்க லாம் என்ற பல நிபந்தனைகளை கொண்ட சட்டபூர்வமான ஆவணககளில் கைசாத்திட்டுக்கொள்கின்றார்கள். இது உலகத்தின் போக்கு. இது சில மனிதர்களுக்கு நன்மையாக தோன்றும் வழியாக இருக்கின்றது. ஆனால், அதன் முடிவோ நன்மைகேதுவாய் இருப்பதில்லை என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. நிபந்தனையற்ற மெய்யான அன்பை பிதாவாகிய தேவன்தாமே, தம்முடைய திருக்குமாரனாகிய இயேசு வழியாக நமக்கு வெளிப்படுத்தினார். அவர்பற்றிக் கொண்டு, அவர் நமக்கு காடிய வழியில் நாம் வாழ்வோமென்றால், இந்தப் பூமியிலே நம்மு டைய வாழ்வும், அதன்முடிவில் நமக்கு உண்டாகும் பலனும் அருமை யானதாகவே இருக்கும்.

ஜெபம்:

அன்பின் பரலோக தகப்பனே, சுய ஞானத்தில் சார்ந்து அறியாமையிலே புத்தியீனமான வாழ்க்கையை வாழாதபடிக்கு, உமக்கு பயந்து உம் வார்த்தைகளின் வழியிலே நான் வாழ எனக்கு உணர்வள்ள இருயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 கொரி 1:18-21