புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 25, 2024)

தேவனால் உண்டாகும் ஆசீர்வாதம்

சங்கீதம் 128:1

கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.


ஒரு மனிதனானவன், தன் குடும்பம் சிறப்பாக வாழ வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு, திருமணமான நாள் முதல், கடுமையாக உழை த்து வந்தான். மாதாந்தம் தன் தேவைக்கு அதிகமாக உழைத்த நாட்கள் முடிவடைந்தது, ஒரு வருடத்தின் தேவைகளுக்கு அதிகமாக உழைத்த நாட்களும் கடந்து சென்றது, இப்போது சந்ததிக்கு தேவையானதை சேர்க்க வேண்டும் என்ற நிலைக்கு கடந்து சென்றுவிட்டான். அவன் தன் மனைவிக்கு தேவைக்கு அதிக மான பொருட்களையும், பணத்தை யும் கொடுத்தான். ஒரு மனைவிக்கு தேவையான பணம், பொருள் போன் றவற்றை அவள் பல வழிகளிலே பெற்றுக் கொள்ளலாம். ஆனால் ஆதரவற்ற நேரங்களிலே, ஒரு கண வனுடைய அன்பையும், ஆதரவையும் யாரால் கொடுக்க முடியும்? அன் பையும் ஆதரவையும் அவள் தேடிய ஆண்டுகள் கடந்து போய் விட்டது. அன்பையும் ஆதரவையும் கொடுத்து, ஐக்கியமாக நாட்களை களிக்கும் நாட்களளை கணவனானவனும் இழந்து போனான். பிள்ளைகளுக்கு கல் வியையும், பொருட்களையும், பணத்தையும், பலரால் கொடுக்க முடி யும். ஆனால் தந்தையின் ஆதரவும், அரவணைப்பும், வழிநடத்து தலும் தேவையான ஆண்டுகளிலே யாரால் அதை கொடுக்க முடியும்? அந்த ஆண்டுகளையும் அந்தத் தகப்பனானவன் இழந்து போனான். எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம் பண்ணினாலும், என் சரீ ரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவி ட்டால் எனக்கு பிரயோஜனம் ஒன்றுமில்லை என்று தேவ அன்பை குறி த்து பரிசுத்த வேதாகமம் கூறுவதை பார்க்கின்றோம். எனவே, ஒரு மனி தனானவன், உண்மையான அன்பு இல்லாமல், தன் ஆஸ்திகள் எல் லாம் அன்னதானம் பண்ணக்கூடிய, ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான். குடும்பத்தின் பிரதானமான தேவை பணம் என்று கருதி வாழும் மனிதர்கள் இவ்வண்ணமாகவே இருக்கின்றார்கள். 'கர்த்தர் வீட்டைக் கட் டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா. கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா.' 'கர்த்தரு க்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கி யவான். உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக் கியமும் நன்மையும் உண்டாயிருக்கும். உன் மனைவி உன் வீட்டோர ங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.' இது தேவனால் உண்டாகும் ஆசீர்வாதம்.

ஜெபம்:

பரலோக தேவனே, இந்த உலகத்தின் போக்கில் இழுப்புண்டு, அந்தந்த காலத்திற்கென்று நீர் வைத்திருக்கும் உம்முடைய ஆசீர்வா தங்களை நான் இழந்து போகாதபடிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:33