புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 24, 2024)

எளியவர்களின் திடனானவர்

ஏசாயா 25:4

நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெரு வெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த முதலாளியாவன், நியாயமான வழியிலே தன் வியாபார விவகாரங்களை நடத்தி, ஊர் மக்கள் மத்தியிலே நற்கீர் த்தியுடன் வாழ்ந்து வந்தான். அந்த ஊருக்கு புதிதாக வந்த வியாபாரி யானவன் அந்த ஊரிலே தன் வியாபர ஸ்தாபனத்தின் கிளையொன்றை நிறுவினான். தன்னுடைய வியாபாரமானது, பெருக வேண்டும் என்ப தற்காக, ஊரிலுள்ள முதலாளியாவனு டைய விவகாரங்களை குறித்த தவ றாக விளரம்பரங்களை பிரசுரித்து வந் தான். அத்தகைய செயலானது, நாட் டின் சட்டத்திற்கு விரோதமானதாக இல் லாதிருந்த போதிலும், அவனுடைய பிரச்சாரங்கள் தவறானதும், அநியா யமானதுமாக இருந்தது. தன் வியா பாரத்தை மேம்படுத்தி, பணத்தை பெருக்க இதுவே வியாபார யுக்தி என்று கூறிக்கொண்டான். காலப் போக் கிலே, ஊரிலே நீதியாக வியாபாரம் செய்து வந்த முதலாளியானவனின் வியாபாரம் வீழ்ச்சி கண்டது. அவனும் அவன் குடும்பமும், பொருளாதார நெருக்கடிக்குள்ளானதால், அந்த ஊரைவிட்டு வேறு ஊருக்கு சென்றுவிட்டார்கள். புதிதாக வந்த வியாபாரியானவனோ, தன் வியாபாரத்திலே பெரும் எழுச்சியை கண்டான். அவனுடைய வியாபார யுக்திகளை சிலர் மெச்சினார்கள். ஊரார் மத்தியிலே நன் மதிப்பை பெறுவதை நோக்கமாக கொண்டு, அந்த ஊரிலே, மக்கள் மத்தியிலே சில நற்கிரியைகளை நடப்பித்தான். தன்னுடைய செயற்பாடுகளை குறித்து அவன் பெருமிதம் அடைந்தான். பிரியமான சகோதர சகோதரிகளே, தன்னுடைய வியாபாரம் மேம்ப டுவதற்காக, இன்னுமொரு குடும்பத்தை அநியாயமாக நஷ்டப்படுத்து வது, அந்த ஊருக்கு புதிதாக வந்த வியாபாரியானவனுக்கு அற்பமாக காரியமாக இருந்தது. ஆண்டுகள் கடந்து சென்றதும், அந்த ஊராரும் அவனுடைய அநியாயமாக செயல்களை மறந்து போனார்கள். ஆனால், பரலோகத்திலிருக்கின்றவர், சிறுமையும் எளிமையுமானவர்களை மற ந்து போவாரோ? இல்லை, அவர் ஒருபோதும் மறந்து போவதில்லை. அவர் ஏழைகளின் பெலனும், எளியோரின் நம்பிக்கையுமாக இருக்கின்றார். அவனவன் தன் தன் கிரியைகளுக்குரிய பலனை அடைவான். எனவே, இந்த உலகத்தின் யுக்திகள் என்ற போர்வையிலே தேவனுக்கு விரோதமான அநியாயங்களை நடப்பிக்காதபடிக்கு எச்சரிக்கையுள்ள வர்களாக இருங்கள்.

ஜெபம்:

உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தாவே, இந்த உலகத்தின் யுக்திகளின் நான் அகப்பட்டு உணர்வற்றவனாய் போகதபடிக்கு என்னை காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 113:7