புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 23, 2024)

ஐசுவரியத்தின் மயக்கம்

மத்தேயு 13:22

உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிற தினால், அவனும் பலனற்று ப்போவான்.


நீங்கள் எவ்வளவு ஐசுவரியவானாக இருக்கின்றீர்கள் என்ற கேள்விக்கு, பதிலளிப்பதற்கு, மனிதர்கள் தங்கள் நிகரமதிப்பு (Net Worth) எத்தனை கோடி என்பதை சுட்டிக் காட்டுவார்கள். அதாவது, தங்கள் கடன்கள் யாவையும் செலுத்திய பின்பு, மிகுதியாக கையில் தேறியிருக்கும் பண மும், சொத்துக்களின் தொகையுமே ஒருவரின் நிகரமதிப்பாகும். அத னால், மனிதர்கள் சொத்துக் களை பெருக்கும்படிக்கு அயராது உழைக் கின்றார்கள். அதை அடைவதற்காக ஏறத்தாழ யாவற்றையும் தங்கள் வாழ் விலே விட்டுவிட ஆயத்தமுள்ளவர் களாக இருக்கின்றார்கள். எடுத்து க்காட்டாக, சொத்துக்களை பெருக் கும் வழியிலே, கணவன் மனைவி யையும், மனைவி கணவனையும் விட்டுவிட ஆயத்தமுள்ளவர்களாக இருக்கின்றார்கள். சில மனிதர்களின் சொத்தை பெருக்கும் பயணத்திலே, பெற்றோர், பிள்ளைகள், சகோ தர்கள், உறவினர், நண்பர்கள், சக வேலையாட்கள், பொதுமக்கள் யாவ ரினது உறவும் ஐக்கியமும் அவர்களுக்கு அற்ப மானதாகவே மாறிவி டுகின்றது. அவ்வண்ணமாக சொத்தை பெருக்கிய மனிதனைப் பார்த்து, அவன் சொத்துக்களோடும், பெயர் புகழோடும் சுகித்து வாழ்கின்றான் என்று மெச்சிக் கொள்கின்றார்கள். ஆனால், அந்த நிலையை அவன் அடைவதற்கு அவன் கொடுத்த கிரயத்தையும், இழந்து போல நன்மை களையும், விட்டுவிட்ட மனித பண்புகளையும் குறித்து இன்று மனி தர்கள் கண்டு கொள்வதில்லை. இத்தகைய உலக போக்கை தாங்கள் பினபற்றுவதுமன்றி, வாழ்க்கையை குறித்து இன்னும் அறியாத சிறுவ ர்களையும் அவ்வழியே நடக்க வைக்கின்றார்கள். அதற்கு பெற்றோ ரும் ஆதரவாளர்ளாக மாறிவிடுகின்றார்கள். பிரியமான சகோதர சகோ தரிகளே, உலக கவலையையும், ஐசுவரியத்தின் மயக்கத்தையும் குறி த்து எச்சரிக்கையாயிருங்கள். அவை முட்கள் நிறைந்த நிலத்தைப் போல இருக்கும். தேவ வசனமாகிய விதை இருதயத்திலே வளர்ந்து கனி கொடுக்காதடிக்கு, ஐசுவரியத்தின் மயக்கம் தேவ வசனத்தை நெருக்கிக் போடு வதால், வாழ்க்கை பலனற்றதாக மாறிவிடும். ஒருவனுக்கு எவ்வளவு ஆஸ்தி இருந்தாலும், அது அவனுக்கு ஜீவனல்ல. எனவே, தந்திரமாக மனிதர்களுடைய மனங்களை கவர்ந்து கொள்ளும் உலக போக்குகளை தேவனுடைய ஆசீர்வாதம் என்று கருதி வஞ்சிக்கப்பட்டுப் போகாமல், அவைகளை குறித்தது மிகவும் எச்சரிக்கையுள்ளவர்களாக இருங்கள்.

ஜெபம்:

அன்பின் தேவனே, இந்த உலகத்திலே பொக்கிஷங்களை சேர்த்து வைக்க பிரயாசப்படாமல், நிலையான அழியாத பொக்கிஷங்களை பரலோகிலே சேர்த்துவைக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - லூக்கா 21:34