புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 22, 2024)

தேவனிடத்தில் அன்பாக இருக்கின்றீர்களா?

யோவான் 14:15

நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த இளம் தம்பதிகள், திருமணத்திற்கு பின்பு, ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து, புரிந்துணர்வோடு, 'எனக்கு நீ, உனக்கு நான்' என்று சந்தோஷமாய் வாழ்ந்து வந்தார்கள். பல மாதங் கள் கடந்து சென்ற பின்னர், ஆரம்ப நாட்களிலிருந்த பரபரப்பு அற்றுப் போய்விட்டதால், அவர்களுடைய பழைய சுபாவங்கள் வெளிப்பட ஆரம்பித்தது. கணவனானவன், தன் நண் பர்களோடு சேர்ந்து, மதுபானம் அரு ந்து வெறிகொள்ள ஆரம்பித்தான். மனை வியானவளோ, கணவனுக்குரிய கனத் தை கொடுக்காமல், அவனோடு சண்டை செய்கின்றவளாய் இருந்து வந்தாள். அவைகள் மத்தியிலும், அந்த ஊரின் வழக்கப்படி, பெற்றோர் பின்பற்றி வந்த பாரம்பரியத்தின்படி, கணவனானவனு க்கு மனைவியைக் குறித்து அன்பு மனதிலே இல்லாதிருந்த போதிலும், தன் மனைவியை பற்றிய குறைகளை யாரும் பேசும் போது, அவை உண்மையாக இருந்தாலும், விட்டுக் கொடுக்க மாட்டான். அதைப் போல மனைவியானவளும், புருஷனானவனுக்கு அடங்காதவளாக இருந்தா லும், தான் தன் தாயானவளிடம் கற்றுக் கொண்டது போல 'கல்லானா லும் கணவர், புல்லானாலும் புருஷன்' என்று வேறு யாரும் தன் கணவ னைக் குறித்த குறைகளை பேச அனுமதிகக்க மாட்டாள். இது எவ்வ ளவு போலியானதும், பரிதாபமான துமான குடும்ப வாழ்க்கை என்பதை சற்றி சிந்தித்துக் பாருங்கள். பிரியமானவர்களே, ஒரு காலத்திலே, நாம் இந்த உலக போக்கிற்கும், சம்பிரதயச் சடங்குகளுக்கும், பாரம்பரியங் களுக்கும் அடிமைப்பட்டிருந் தோம். தேவனாகிய கர்த்தர்தாமே, நம்மு டைய மனக்கண்களை பிரகாசமடையச் செய்தபோது, நாம் பின்பற்றிய வழிகளை குறித்து வெட்கமடைந்து, அவைகளை விட்டுவிலகி, புதியும் ஜீவனுமாகிய பாதையை கண்டடைந்தோம். அந்த புதிதும் ஜீவனுமான பாதையிலே வெற்றிகரமாக நடப்பதற்கு, நாம் மறுபடியும் தேவனை அறியாத காலத்திலே பின்பற்றி வந்த உலக போக்கைகின் யுக்திகளை பின்பற்று வது சரியாகுமா? இல்லை. நாம் ஆண்டவர் இயேசு காட்டிய வழியிலே, அவர் வாழ்ந்த பிரகாரமாக வாழ வேண்டும். ஆனால், சிலரோ, ஆண்டவர் இயேசுவின் கற்பனைகளை தங்கள் இருதயத்தை விட்டு மனதார தள்ளிவிட்டு, மற்றவர்கள் மத்தியிலே ஆண்டவர் இயேசுவின் பாதுகா வலராக மாறிவிடுகின்றார்கள். அவரவர் தங்கள் வழிகளை ஆராய்ந்த றிவது அவரவருக்கு நன்மையாக இருக்கும்.

ஜெபம்:

என் இருதய நினைவுகளை அறிந்த தேவனே, உலக வழக் கப்படி உம்மை சேவியாமல், நித்திய ஜீவனை அடையும்படிக்கு மன தார உம்முடைய கற்பனைகளை கைக்கொள்ள உணர்வுள்ள இருதயத்தைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 2:24