தியானம் (வைகாசி 21, 2024)
ஏன் மனத்திருப்தியற்ற நிலை?
புலம்பல் 3:40
நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த வாலிபனானவனுக்கு, பண்ணையின் முதலாளியாகிய அவன் தகப்பனானவர் பண்ணையிலே சில வேலைகளை கொடுத்திருந்தார். அந்த வேலையானது அவன் பிழைப்புக்குரியதாக இருந்ததால், நாளாந்தம் அந்த வேலைகளை ஒழுங்காக செய்து வந்தான். ஆனாலும், அவன் தன் தகப்பனானவரை சந்திக்கும் போது, அவன் மனதிலே திருப்பதியில்லாதிருந்தது. ஏனெனில், அவனுடைய சில தகாத நண்பர்களுடனான தொடர்பைக் குறித்து அவன் தகப்பனானவர், ஆண் டுகளுக்கு முன்னதாக, அவனுக்கு கூறியிருந்த அறிவுரையை அவன் முழு மையாக பின்பற்றாமல், தகாத வழிகளிலே செல்லும் நண்பர்களுடன் போக்கும் வரத்துமாக இருந்து வந்தான். ஊரார் மத்தியிலே, எழுத்தளவிலே, தன் தகப்பனானவரே தன் நண் பர்களைவிட முதன்மையானவரும், அன்புக்குரியவரும் என்ற நியதி இருந்த போதிலும், செயற்பாட்டளவிலே அவன் தன் தகப்பனானவரைவிட தன் நண்பர்களை மேன்மைப் படுத்தி வந்தான். அதனால், தகப்பனானவருடைய அறிவுரை அவன் மனிதிலே நிலைத்திருக்கவில்லை. அதனால், அவன் தகப்பனானவர் அவனை வெறுத்து தள்ளிவிட்டாரோ? இல்லை, மாறாக அவன் செல்லும் வழியைக் குறித்து கவலையடிந்தவராக இருந்தார். தன் குமாரனடைய தவறான தீர்மானங்களினால் அவனுக்கு ஏற்படக்கூடிய பாதகமான பின்விளைவுகளைக் குறித்து அவன் எண்ணமில்லாமல் நடந்து கொள்கின்றான் என்பதை கண்டு மிகவும் மனவருத்தப்பட்டார். தகப்பனானவர் அவனை தள்ளிவிடவில் லை, ஆனால், அவருடைய அறிவுரைகளை அவன் மீறி நடப்பதால், தகப்பனானவரை விட்டு தன்னை தானே அவன் தூரப்படுத்திக் கொண் டிருந்தான். பிரியமான சகோதர சகோதரிகளே, இவ்வண்ணமாகவே சில விசுவாசிகளும், வாரந்தோறும், தேவ காரியங்களை ஒழுங்காகவும், கிரமமாகவும் செய்து வருகின்றார்கள். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன் அவர்கள் வாழ்க்கையைக் குறித்து, தேவனானவர் உணர்த்திய தவறான வழிகளை காணாதவர்கள் போல நடந்து கொள்கின்றார்கள். அதனால், தேவனுடைய சமுகத்திலே ஆராதனைக்கு வரும் போதும், மனதிலே பூரண திருப்தியற்றவர்களாக இருக்கின்றார்கள். தேவ சமுகத்திலே உங்கள் மனம் எப்படி இருக்கின்றது? உங்களையே நீங்களே ஆராய்ந்து பார்த்தது கர்த்தரிடம் திரும்புங்கள்.
ஜெபம்:
என் தேவனாகிய கர்த்தாவே, என் ஆராய்ந்து, என் இருதயத்தின் நினைவுகளை முன்னறிந்தவரே, வேதனை உண்டாக்கும் வழிகளிலிருந்து நான் விடுதலையடையம்படி உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 139:23-24