புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 20, 2024)

கர்த்தர் என்னோடி இருக்கின்றாரா?

யோவான் 15:4

என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்;


தேவனுடைய வாக்குத்தத்தங்கள் மாறாதவைகள் என்பதை நாம் நன்றாக அறிந்திருக்கின்றோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திலே தம்முடைய திருப்பணியை பிதாவாகிய தேவனுடைய சித்தப்படியே முற்றாக நிறைவேற்றி முடித்த பின்னர், பரலோகத்திற்கு எழுந்தருளுவதற்கு முன்னதாக, 'நான் உங்களுக்குக் கட்டளை யிட்ட யாவையும் அவர்கள் கைக் கொள்ளும்படி அவர்களுக்கு உப தேசம் பண்ணுங்கள்; இதோ, உல கத்தின் முடிவுபரியந்தம் சகல நாட் களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்' என்று கூறியிருக்கி ன்றார். இதை மிகப் பெரிய பொறுப்புப் பணி (The Grate Commission) என்று நாம் அழைக்கின்றோம். அவர், உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்று கூறி யிருக்கின்ற போதும், விசுவாசிகளுடைய வாழ்க்கையிலே, சிலவேளை களிலே ஏன் அவருடைய பிரசன்னத்தை உணர முடியாமல் இருக்கின் றது? ஏனெனில் நாம் தேவனுடைய வார்த்தையைவிட்டு விலகி காரிய ங்களை நடப்பிக்கும் போது நாம் வார்த்தையானவராகிய இயேசு கிறி ஸ்துவின் பிரசன்னத்தை உணராது போய்விடுகின்றோம். அவர் தாமே, தம்மை கிருபாதார பலியாக சிலுவை மரணத்திற்கு ஒப்புக் கொடுக்க முன்பதாக, அந்த இராத்திரியிலே, தம்முடைய சீஷர்களை நோக்கி: 'என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங் களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள் வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதி னால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்' என்று கூறியிருக்கின்றார். பிரியமானவர்களே, ஆண்டவர் இயேசுவின் சீஷர் களாகிய நாம் அவர் கட்டளையிட்ட யாவையும், அவர் கூறியபடியே உபதேசிக் கற்றுக் கொள்ள வேண்டும். அவருடைய வார்த்தைகள் ஜீவ னுள்ளவைகள். கலப்படம் அற்றவைகள். எனவே நாம் அவருடைய வார்த்தையில் நிலைத்திருந்து, அவற்றை உபதேசிக்கும் போது, வார்த் தையானவர் நம்மில் எப்போதும் நிலைத்திருக்கின்றதை உணர்ந்து கொள்வோம்.

ஜெபம்:

கிருபையம் சத்தியமுமுள்ள தேவனே, நான் உம்முடைய சத்திய வார்த்தைகளில் நிலைத்திருந்து, அந்த வார்த்தைகளை சுத்தமாக உபதேசிக்கும்படிக்கு நீர் என்னை பெலப்படுத்தி நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 28:18-20