புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 19, 2024)

நான் உன்னை மறப்பதில்லை

ஏசாயா 49:15

ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.


எத்தனை கஷ;டங்கள்? எத்தனை வேதனைகள்? 'நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை' என்று அவர் சொல் லியிருக்கிறாரே. உண்மையிலே ஆண்டவராகிய இயேசு என்னோடு இருக்கின்றாரா? என்று ஒரு விசுவாசியானவன் தனக்குள்ளே நொந்து கொண்டான். அந்த விசுவாசியானவன் மாத்திரமல்ல, முன்னோடிகளாக சென்ற பரிசுத்தவான்களின் வாழ்க் கையிலும், பயங்கரமாக சூழ்நி லைகள் அவர்களுடைய விசுவாசக் கப்பலிலே மோதிய போது, கர்த் தர் என்னை மறந்தாரோ, கைவிட் டாரோ என்று அவர்களும் பயந்து திகிலடைந்த சந்தர்ப்பங்கள் உண்டு. இன்றைய நாட்களிலும், விசுவாசிகளின் வாழ்க்கையை அழு த்தும், நவீனமும் நாகரிகமுமான பிரச்சனைகள் சில வேளைகளிலே அவர்களையும் கலங்கடித்து விடு கின்றது. கரை நோக்கி வருகின்ற அலைகள் அன்று எப்படி இருந் ததோ, இன்றும் அப்படியே இருக்கின்றது. இன்றைய உலகின் சவா ல்கள், ஒருவேளை நாகரீகமானவைகளாக தோன்றலாம், ஆனால் அவைகள் எதுவுமே புதிதானவைகள் அல்ல. 'நாம் தேவனால் உண் டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கி றதென்றும் அறிந்திருக்கிறோம்'. ஆதிமுதல் அவன் வஞ்சிக்கின்ற வனாகவே இருக்கின்றான். அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரி யாதவைகள் அல்லவே. எப்படியாக முன்னிருந்த உலகங்களிலே இச்ச சைகள் வளர்ந்து பெருகி நிறைந்திருந்தது என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள், நோவாவின் நாட்கள், பாபேல் கோபுரம் கட்டப்பட்ட நாட் கள், சோதோம் கோமோராவின் நாட்கள், பண்டைய எகிப்தின் நாட்கள் இப்படியாக, அந்தந்த காலங்களிலே இருந்த தேவ ஜனங்களுக்கு அன் றைய உலகங்கள் நாகரீகமாக இருந்தது. ஆனால், அவைகள் யாவி னதும் அடிப்படை பிரச்சனைகள் ஒன்றாகவே இருந்தது. தேவனுடைய தீர்க்கரிசியாகிய எலியா, தான் ஒருவன் மாத்திரமே, தேவனை சேவிக்க இருக்கின்றேன் என்று நினைத்துக் கொண்டான். ஆனால், அவனைவிட இன்னும் ஏழாயிரம் பேர் தேவனுக்காக வைராக்கியம் கொண்ட வர் களாக இருந்தார்கள். பிரியமானவர்களே, கர்த்தர் தம்முடையவர் களை ஒருபோதும் மறந்து போகின்றவர் அல்லர். எனவே சூழ்நி லைகளை கண்டு மனம் பதறாமல், விசுவாசத்தில் நிலைத்திருங்கள். உலகத்தை ஜெயித்தவர் என்றென்றும் உங்களோடு இருக்கின்றார்.

ஜெபம்:

இருக்கின்றவராக இருக்கின்ற தேவனே, நீர் ஒருபோதும் என்னை மறந்து போவதில்லை என்ற வார்த்தையை நான் இறுகப் பற்றிக் கொண்டு, விசுவாசத்திலே நிலைத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபிரெயர் 13:5