புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 18, 2024)

பயங்கரங்கள் சூழும்போது பயப்படாதிருங்கள்

ரோமர் 8:31

தேவன் நம்முடைய பட்சத் திலிருந்தால் நமக்கு விரோ தமாயிருப்பவன் யார்?


ஆண்டவராகிய இயேசுவின் சுவிசேஷத்தின் நிமித்தம், அவருடைய சீஷனாகிய பவுல் என்பவர், சிறைக் கைதியாக, கப்பல் வழியாக ரோமாபுரிக்கு கொண்டு செல்லப்பட்டார். வழியிலே, கப்பலானது பெரும் புயங்காற்றில் அகப்பட்டது. கப்பலிலிருந்த யாத்திரிகள் யாவரும், அநேகநாளாய்ச் சூரியனாவது நட்சத்திரங்களாவது காணப்ப டாமல், மிகுந்த பெருங்காற்றுமழையும் அடித்துக்கொண்டி ருந்தப டியினால், இனி தப்பிப்பிழைப்போ மென்னும் நம்பிக்கை முழுமையும் அற்றுப்போயிற்று. அநேகநாள் அவ ர்கள் போஜனம்பண்ணாமல் இருந் தபோது, பவுல் அவர்கள் நடுவிலே நின்று: மனுஷரே, இந்த வருத்தமும் சேதமும் வராதபடிக்கு என் சொல் லைக்கேட்டு, கிரேத்தாதீவை விட்டு ப்புறப்படாமல் இருக்கவேண்டியதா யிருந்தது. ஆகிலும், திடமனதாயிருங்களென்று இப்பொழுது உங்களு க்குத் தைரியஞ்சொல்லுகிறேன். கப்பற்சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது. ஏனென்றால், என்னை ஆட் கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்து நின்று: பவுலே, பயப்ப டாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும். இதோ, உன்னுடனே கூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண் ணினார் என்றான். பிரியமான சகோதர சகோதரிகளே, ஆண்டவராகிய இயேசு பவுலோடு கூட இருந்தார். அன்றைய நாளிலே, கப்பல் சேதம டைந்து உடைந்து போயிற்று. அவர்கள் நீந்தி கரைசேர்ந்து குளிர் காயும் போது, ஒரு விரியன்பாம்பு பவுலுடைய கையை கவ்விக் கொண் டது. அவனோ அந்தப் பாம்பை தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடை யாதிருந்தான். இந்த உலகிலே, நம்முடைய ஜீவ யாத்திரையிலும் புயல்கள், சேதங்கள், எதிர்ப்புக்கள், பரியாசங்கள், பயங்கரங்கள் வந்து சூழ்ந்து கொள்ளலாம். ஆனால், அவையொன்றும் தேவ சித்தத்தை மேற்கொள்ளுவதில்லை. தேவ மனுஷனாகிய பவுல், தேவ ஆலய த்திலே பிரங்கித்தார், கைது செய்ய ப்பட்டு ஆலோசனைச் சங்கத்திற்கு முன் நின்றார். அடிக்கப்பட்டார், சிறையிலே போடப்பட்டார். ராஜாக்கள் முன்னிலையிலே நிறுத்தி விசாரிக்கப்பட்டார். எல்லா சூழ்நிலைகளிலும், கர்த்தர் அவர் இருக்கும் இடத்தில் அவரோடு இருந்தார். அதேபோல நாம் தேவ சித்தத்திற்கு நம்மை ஒப்புக் கொடுக்கும் போது கர்த்தர் இன்றும் என்றென்றும் நம்மோடிருந்து வழிநடத்திச் செல்வார்.

ஜெபம்:

உயர்விலும் தாழ்விலும் என்னோடிருக்கின்ற தேவனே, சுற்றி சூழும் பயங்கரங்களை கண்டு நான் மருண்டுபோய்விடாதபடிக்கு, பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - அப்போஸ் 18:9-10