புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 17, 2024)

மகா பெரிய பலனும் கேடகமுமானவர்

கலாத்தியர் 3:14

ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும்,


ஆபிரகாம் என்னும் மனிதனானவன், சுமார் எழுபத்தைந்து வயதாயிரு தபோது, தேவனாகிய கர்த்தர் தாமே அவனை நோக்கி: நீ உன் தேசத் தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமை ப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். ஆபிரகாம் தேவனாகிய கர் த்தர் சொன்னபடியே, அவருடைய வாக்கை நம்பி, தன் தேசத்தையும், இனத்தையும், தகப்பனுடைய வீட்டையும் விட்டு, அந்நிய தேசத்திலே குடியிருந்தான். நான் உன்னை பெரிய ஜாதிக்குவேன் என்று தேவனாகிய கர்த்தர் கூறியிருந்த போதும், கர்த்தர் அவனை அழைத்த நாளிலே, ஆபிரகாமிற்கும், அவன் மனைவியாகிய சாராளுக்கும் பிள்ளையில்லாதிருந்தது. கர்த்தர் அவர்களை அழைத்து அநேக ஆண்டுகள் சென்ற பின்பும் அவர்கள் இருவருக்கும் பிள்ளையிலாதிருந்தது. கர்த்தர் மறுபடியும் ஆபிரகாமை நோக்கி: ஆபிராமே, நீ பயப்படாதே, நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பல னுமாயிருக்கிறேன். நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி, பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார். அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார். தேவனாகிய கர்த்தர் ஆபிரகாமை கொண்டு செய்ய நினைத்ததை மறுபடியும் ஆபிரகாமிற்கு உறுதிப்படுத்தினார். குறித்த காலம் நிறைவேறியபோது, அவர் சொன்னபடியே தம்முடைய வாக்கை செய்து முடித்தார். பிரியமானவர்களே, காலங்கள் கடந்து செல்லும் போது, கர்த்தர் உங்களுக்கு சொன்ன வார்த்தையை குறித்து உங்கள் மனதில் சந்தேகம் உண்டாகின்றதா? ஆண்டுகள் விரையமாகிவிட்டது என்ற பயம் மனதிலே உண்டாகின்றதா? கர்த்தரை நம்பி வந்தேன் நான் வெட்கப்பட்டு போய்விடுவேனா என்ற கவலை உண்டாகின்றதா? பயப்படாதிருங்கள்! ஆபிரகாமிற்கு உண்டான ஆசீர்வாதம், கர்த்தராகிய இயேசு வழியாக நமக்கு உண்டாயிருக்கின்றது. சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் தாமே நமக்கு அடைக்கலமும் கேடகமும், மகா பெரிய பலனுமாயிருக்கின்றார். எனவே விசுவாசத்திலே உறுதியாய் நிலைத்திருங்கள்.

ஜெபம்:

என் பெலனும் கேடகமுமான தேவனாகிய கர்த்தாவே, நீர் சொன்னத்தை செய்து முடிக்கும் தேவன்! அந்த விசுவாசத்திலே நான் அசையாமல் நிலைத்திருக்கும்படிக்கு நீர் என்னை காத்து வழிநடத்துவீ ராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ஆதியாகமம் 15:1-6