புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 15, 2024)

தேவ பாதுகாப்புக்குரியவர்கள் யார்?

சங்கீதம் 91:1

உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.


'உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். உன் பாதம் கல்லில் இடறாத படிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள்' (சங்கீதம் 91:11-12). இந்த வார்த்தைகள் இவ்வுலக கவியர சுகளால் எழுத்தப்பட்ட உண்வுகளை தூண்டிவிடும் வெறும் அடுக்கு மொழிகளா? இல்லை! இவை தேவ ஆவியினால் அருளப்பட்ட ஜீவ வார்த்தைகள். எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் தம் வாக்கில் உண்மையுள்ளவராக இரு க்கின்றார். (எபிரெயர் 6:18). யார் இந்த சிலாக்கியத்தை பெற்றவ ர்கள்? இந்த பாக்கியத்தை பெற் றுக் கொள்வதற்குரிய தகைமைகள் என்ன? 'திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி, மிகையான செல்வாக்குகள்' போன்றவற்றால் தேவ பாது காப்பை பெற்றுக் கொள்ள முடிமோ? உலக மேன்மைளாகல் உன்னத மானவற்றை பெற்றுக் கொள்ள முடியாது. பாவிகளும், அநியாயம் செய்கின்றவர்களும், துன்மார்கத்தில் வாழ்கின்றவர்களும், ஆண்டவர் இயேசுவை அறியாமல் கோபாக்கினையின் பிள்ளைகளாக வாழ்கின்ற வர்கள் இதை பெற்றுக் கொள்ள முடியாதா? இந்த மேன்மையான பாதுகாப்பை யாவரும் பெற்றுக் கொள்ளும்படி, பிதாவாகிய தேவன் தாமே, தம்முiடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு அனுப்பினார். அவரை விசுவாசித்து, அவர் காட்டிய வழியிலே வாழ தன்னை ஒப்புக் கொடுக்கும் மனிதர்கள் யாவரும். நமக்கு அடைக்கலமாயிருக்கின்ற உன்னதமான கர்த்தரை தாபராமாக் கிக் கொள்கின்றார்கள். அப்படி அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர் களோ, அத்தனைபேர்களும், அவர்களுடைய பழைக வாழ்க்கையானது எப்ப டிப்பட்டதாக இருந்தலும், அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். அப்படியாக தேவ பிள்ளை களாக்ப்பட்டவர்கள் இனி பாவிகளும், அநியாயக்காரர்களும், துன்மார் கர்களும், பறிகாரர்களும் என்று அழைக்க்படுவதில்லை. அவர்களை தம்முடைய பிள்ளைகள் என்று கூறுவதற்கு பிதாவாகிய தேவன் வெட் கப்படுவதுமில்லை. இவர்கள் உன்னதமான தேவனின் மறைவிலிரு க்கின்றர்கள். சர்வ வல்லமையுள்ள தேவனுடைய நிழலிலே தங்குகின்றார்கள்.

ஜெபம்:

உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான் என் உரைத்த தேவனே, இந்த மகத்துவமுள்ள பாக்கித்தை நான் அசட்டை செய்யாதபடிக்கு வாழ பிரகாசமுள்ள மனக் கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சகரியா 2:5,8