தியானம் (வைகாசி 14, 2024)
      நீ போகும் இடமெல்லாம்...
              
      
      
        யோசுவா 1:7
        நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக.
       
      
      
        அப்பா உங்களுடைய பாதுகாப்பிற்குள் இருக்கச் சொல்கின்றீர்களே, அப்படியானால் நான் ஒரு இடமும் போக முடியாதா? ஒன்றுமே செய்ய கூடாதா? யாருடனும்; பேச முடியாதா? என்று ஒரு மகனானனவன், தன் தகப்பனானவரிடம் கேட்டுக் கொண்டான். அந்த மகனானவனைப் போல, விசுவாசிகளும் இத்தகைய கேள்விகளை கேட்டுக் கொள்வதை நீங்கள் கவனித்திருக்கலாம் அல்லது 'இவர்கள் கூறுவதைப் பார்த்தால் நாங்கள் இந்த பூமியிலே வாழவே முடி யாது போல இருக்கின்றதே' என்ற சிந்தைகள் உங்கள் மனதிலே தோன் றியிருக்கலாம். தேவ னுடைய பல த்த கரத்திற்குள் அடங் கியிருப்ப தென்பதன் பொருள் என்ன? வேறு பிரிக்கப்பட்ட வாழ்க்கை என்பது என்ன? எப்போதும் தேவ ஆலயத் திலே வாசமாயிருப் பதா? வீடும், பாடசாலையும், வேலையும் என்று விசுவாசிகள் தங்கள் சுற்றுவட்டத்தை குறுகியதாக்கிக் கொள்வதா? இன் றைய உலகிலே, சிறுவர்கள், வாலிபர்கள், பெரியவர்கள், வயதானவ ர்கள் யாவரும், வீட்டிற்குள் இருந்து கொண்டே, தங்கள் கைத் தொலை பேசி சாதனத்தினால், உலகத்தை சுற்றி வருகின்றார்கள். ஏறத்தாழ தங்கள் ஆசை விருப்பங்கள் யாவையுமே இன்ரநெற் ஊடகங்கள் வழி யாக நடத்தி முடிகின்றார்கள். ஒருவன் தன் தகப்பனானவரின் பாது கா ப்பிற்குள் அடங்கியிருப்பதென்றால், அவன் வீட்டிலிருந்தாலும், வெளியி லிருக்க நேரிட்டாலும், தன் தகப்பனானவர் சொல்வதை கேட்டு, அவ ருடைய வார்த்தைக்கு கீழ்படிந்து, அதன்படி நடக்கின்றவனாக இருக்க வேண்டும். 'நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்து கொள்ளும் படிக்கு, கர்த்தருடைய வேதத்தைவிட்டு, வலது இடது புறம் விலகாதிரு ப்பாயாக. அவருடைய வார்த்தை உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்ப தாக. அவருடைய வார்த்தையை செய்ய கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், புத்திமானாயும் நடந்து கொள் ளுவாய்'  என்று தேவனாகிய கர்த்தர் தன்னுடைய தாசனாகிய யோசு வாவுக்கு அறிவுரை கூறியிருக்கின்றார். நாமும் அவருடைய வார்த் தயை கேட்டு, அதை நம் வாழ்வில் கைக்கொள்ளும்போது, நாம் எங்கு செல்ல வேண்டி நேர்ந்தாலும்,  நாம் எப்பொழுதும் அவருடைய பலத்த கரத்திற்குள் அடங்கியிருப்பவர்களாக காணப்படுவோம்.
      
      
      
            ஜெபம்: 
            உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களோடிருக்கின்றேன் என்ற சொன்ன தேவனே, நான் எங்கு செல்ல நேர்ந்தாலும், உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்திலே வாழ எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
      
 
      
              மாலைத் தியானம் - 1 பேதுரு 5:6