தியானம் (வைகாசி 12, 2024)
நான் இருக்க வேண்டிய இடம்
பிரசங்கி 10:8
படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான்; அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும்.
மந்தையிலே இருந்த ஆட்டுக்குட்டியொன்று, பண்ணையின் அப்புறத்திலுள்ள பன்றிக்குட்டியோடு சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. அதை கண்ட தாய் ஆடானாது, தன் குட்டியைப் பார்த்து, எங்கள் எஜமானனானவன் எங்களுக்கென்று ஒரு தொழுவத்தை அமைத்து, வாசலை காத்து, குறித்த நேரத்திலே பசும்புல் மேய்ச்சலிலே நடத்தி, அமர்ந்த தண்ணீரண்டை எங்களை சேர்க்கின்றார். ஆனால், நீயோ எங் கள் எஜமானனானவன் எங்களுக்கு போட்ட எல்லையை மீறி, பன்றிகளின் அழுக்கான பட்டியினருகே சென்று, அவைகளோடு விளையாடி வருகின்றாய், இதனால் உனக்கு ஆபத்து ஏற்படும், நீ பலனற்றுப் போவாய் என்று எச்சரித்தது. அதற்கு மறுமொழியான அந்தக் குட் டியாடு தன் தாயாட்டை நோக்கி: அந் தப் பன்றிக்குட்டியை பாருங்கள், அது என்னை போல ஒரு குட்டி, அதனால் என்ன ஆபத்தது வரும் என்று கூறி, பன்றிகளின் பட்டியருகே போக்கும் வரத்துமாக இருந்தது. நாட்கள் கடந்து சென்றதும், ஆட்டுக் குட்டியும், பன்றிக் குட்டியும் வளர்ந்து வந்தது. குறித்த காலத்திலே அந்த பன்றி, பன்றிகளைப் போல சேற்றிலே புரண்டு, பன்றியைப் போலவே இருந்து. அதனால், அந்த ஆடும், அந்தப் பன்றியைப் போலவே அழுக்கானதும் நாற்றமெடுக்கின்றதாகவும் இருந்தது. பிரியமான சகோதர சகோதரிகளே, இப்படிப்பட்ட கதைகளை வாசிக்கும் போது, சிலர் இது ஒரு சாத்தியமற்ற கற்பனைக் கதை என்றும், இது நகைப்புக்குரியதென்றும் எண் ணிக் கொள்கின்றார்கள். ஒரு வேளை மிருகங்கள் மத்தியிலே இது சாத்தியமற்றதாக இருக்கலாம். ஆனால், உளையான சேற்றிலும், படுகுழியிலு மிருந்து, ஆண்டவராகிய இயேசுவின் விலைமதிக்கமுடியாத இரத்தத்தினாலே பாவமறக் கழுவப்பட்டு, கன்மலையின் மேல் தூக்கி நிறுத்தப்பட்டவர்கள், மறுடியும், எஜமனானனாகிய இயேசு போட்ட பாதுகாப்பின் வேலியை தாண்டி, பாவ சேற்றை நாடி, இந்த உலகத்தின் போக் கிலே வாழ்பவர்களோடு மிகவும் ஐக்கியமுள்ளவர்களாக வாழ்ந்து வருகின் றார்கள். இந்த சம்பவமானது வெறும் கற்பனை கதையல்ல. இது நகைப்புக்குரியதுமல்ல. படுகுழியை மறுபடியும் வெட்கின்றவன் ஒரு நாள் அதற்குள்ளே மறுபடியும் விழுந்து விடுவான். கர்த்தர் போட்ட பாது காப்பின் வேலியை பிடுங்குகின்றவன், சர்ப்பத்தினால் தீண்டப்படுவான். எனவே, எச்சரிக்கையுள்ளவர்களாக இருங்கள்.
ஜெபம்:
பாவ சேற்றிலிருந்து என்னை தூக்கி எடுத்த என் தேவனே, நீர் எனக்கு போட்ட எல்லையை நான் மீறி நடப்பதற்கு துணிகரம் கொள்ளாதபடிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 1:1-6