புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 11, 2024)

விசுவாசத்திலே நிலைத்திருங்கள்

சங்கீதம் 62:10

ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள்.


ஒரு ஊரிலே சிறு வியாபாமொன்றை செய்து வந்த விசுவாசியானவன், தன் குடும்பத்தின் அன்றன்றைய தேவைகள் சந்திக்கும் அளவிற்கு மட் டாக உழைத்து, எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்தான். சபையிலே நடை பெறும் எந்த ஆராதனைகளையும், ஜெப கூட்டங்கள், உபவாசங் கள், கன்வென்ஷன் நாட்கள் உட்டப எல்லா நிகழ்சிகளிலும் தவறமாக கலந்து கொண்டு, குடும்பமாக தேவ ஊழியத்தில் பங்கெடுத்து, மிகவும் ஆதரவாக இருந்து வந்தான். கல்வி, வேலை, உல்லாச பயண ங்கள் என்று ஆராதனைகளை அச ட்டை செய்யும் விசுவாசக் குடும் பங்களை கண்டிப்பதில் அவன் பின் நிற்பதில்லை. ஆண்டுகள் கடந்து சென்ற பின்பு, எதிர்பாராதவிதமாக அவன் வியாபாமானது வளர்ச்சி யடைய ஆரம்பித்தது. அடுத்த ஊர் களிலும், பட்டணத்திலும் கிளைகளை ஆரம்பித்தான். அவனுக்கு புதிய செல்வாக்கு நிறைந்த நண்பர்கள் பெருகினார்கள். அவன் ஐசுவரியம் மிகுதியானதினால், ஊரிலே இருந்த சில பண்ணைகளையும் விலை கொடுத்து வாங்கினான். பிள்ளைகள் கல்வி தவிர்ந்த இதர விளையா ட்டு கலைகளிலே முன்னேறும்படி அவர்களை சில கழங்களிலே பதிவு செய்தான். தன் புதிய நண்பர்களுக்கு ஈடு கொடுக்கும்படி, குடும்பமாக உல்லாசப் பயணங்களை மேற்கொண்டான். தாங்கள் சென்று வந்த சபைக் கட்டிடங்களை பெரிப்பித்து கட்டி, அதை நவீன மயப்படுத்துவ தற்கு பண உதவி செய்தான். ஆனால், காலப் போக்கில், அவர்கள் ஞாயிறு ஆராதனைகளிலே பங்குபெற்றுவதே மிகவும் அருமையாக இருந்தது. தேவன் தங்கள் கையின் பிரயாசத்தை ஆசீர்வதித்தார் என்று கூறிக் கொள்வார்கள் ஆனால் அவர்கள் கனி யற்ற வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். ஆம் பிரியமானவர்களே, சில ஐசுவரியவான்களின் விசு வாசத்தை வறுமை சோதிப்பது போல, எளிமையான வாழ்க்கை வாழும் விசுவாசிகளின் விசுவாச வாழ்க்கையும் அவர்கள் வாழ்வில் ஏற்படும் பொருளாதார செழிப்பினால் வெளிப்படு த்தப்படும். ஐசுவரியமுள்ள வனாய், இரத்தாம்பரமும் விலையேறப் பெற்ற வஸ்திரமும் தரித்து, இயேசு இல்லாமல் சம்பிரமமாய் வாழ்ந்து பாதாளத்திற்கு செல்வ தைவிட, இந்த உலகிலே வாழும் நாட்களிலே ஏழையாக இருந்து, பல கஷ;டங்களை அனுபவிக்க நேர்ந்தாலும் பரமன் இயேசுவோடு வாழ்ந்து, பரலோகத்திலே நீடூழியாய் வாழும் பாக்கியமே மேலானாது.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனேஇ இந்த உலகத்திலே நான் பாடுகளை அனுபவிக்க நேர்ந்தாலும்இ உலக போக்கில் நான் சிக்கிக் கொள்ளாதபடிக்கு என்னை காத்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 37:3-4