புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 10, 2024)

தேவனை சார்ந்து வாழுங்கள்

யோபு 1:21

கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான்.


செல்வ, செழிப்போடும், பெயர், புகழுடன் வாழும் ஐசுவரியவானின் தேவ பக்தி எதினால் சோதித்தறியப்படும்? ஐசுவரியத்தோடு வாழும் விசுவாசியானவர்களின் பொருளாதார நிலைமை பெரும் வீழ்சியைக் காணும் போது, அவர்களில் எல்லோரும் தேவனை தூஷpத்து அவ ரைவிட்டு விலகும் இதயம் உடையவர்கள் அல்ல. யோபு என்ற பக்தன், ஐசுவரியமுள்ளவனும், கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரிய வனாயிருந்தான். தேவனுடைய பாதுகாப்பின் வேலி யோபுவை சுற்றியிருக்கின்றது, அத்தோடு தேவன் அவன் கைகளின் கிரி யையை ஆசீர்வதித்திருக்கின் றார். அதனால் அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று. இதனிமித்தமே யோபு பக்தியள்ளவனாக இருக்கின்றான் என்று பிசா சானவன் குற்றப்படுதினான். நாட்கள் கடந்து சென்ற போது, யோபு தனக்குண்டான யாவற்றையும் இழந்து, உடல் முழுவதும் பருக்களும் புண்களும் நிறைந்தவனாய், ஆதரவற்றவனாக தள்ளப்பட்டான். ஆனால், அவன் தன் தாழ்மையிலே தேவனை தூஷpயாமல், தேவன்மேல் கொண்டுள்ள விசுவாசத்திலே முடிவு பரியந்தமும் உறுதியாக தரித்தி ருந்தான். யோபுவைப் போன்ற சில தேவ பக்தியுள்ள ஐசுவரியவான்கள் இந்த உலகத்திலே இருக்கின்றார்கள். அவர்கள் தங்கள் நிறைவிலும், குறைவிலும், உயர்விலும், தாழ்விலும் பிதாவாகிய தேவனுடைய சித்த த்தை தங்கள் வாழ்விலே நிறைவேற்றி முடிக்க ஆயத்தமுள்ளவர்க ளாகவே இருக்கின்றார்கள். வேறு சில ஐசுவரியவான்கள், யோபுவின் மனைவியைப் போல, செழிப்பு நிறைந்த உயர்வான நாட்களிலே பக்தியுள்ளவர்கள் போல காட்சியளிக்கின்றார்கள். ஆனால், வறுமை அவர்கள் விசுவாசத்தை சோதிக்கும். அவ்வண்ணமாக குறைவு ஏற்படும் போது, அப்படிப்பட்டவர்கள் தேவனை தூஷpக்கின்றவர்களாக மாறி விடுகின்றார்கள். இன்னும் சிலர், ஆண்டவர் இயேசுவிடம் வந்த ஐசவ ரியமுள்ள வாலிபனைப் போல, தேவ கற்பனைகளை கைகொள்ளு கின்ற போதிலும், இயேசுவை பின்பற்றும் அழைப்பைவிட தங்கள் ஐசுவரியத்தை விரும்புவதினால், துக்கத்தோடு போய்விடுகின்றார்கள். பிரியமானவர்களே, வசதியோடு வாழும் விசுவாசிகளின் விசுவாசத்தை அவர்கள் வாழ்வில் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியானது சோதிக்கும். அப்படிப்பட்ட வேளையிலே உங்கள் விசுவாச அறிக்கையானது சொல் லிலும் செயலிலும் காண்பிக்கப்படும் பொருட்டு, நீங்கள் எப்போ தும் தேவனை சார்ந்து வாழுங்கள்.

ஜெபம்:

என் சகாயராகிய தேவனாகிய கர்த்தாவே, என் ஆத்துமா, எந்த சூழ்நிலையிலும், உம்மையே நோக்கி அமர்ந்திருக்கும் படிக்கு எனக்கு பிரகாமுள்ள மனக்கண்களை தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 தீமோ 6:10