புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 09, 2024)

வறுமையின் விளைவுகள்

நீதிமொழிகள் 30:9

நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிற தினால் திருடி, என் தேவனு டைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படி யை எனக்கு அளந்து என் னைப் போஷித்தருளும்


ஒரு மனிதனுடைய வாழ்விலே உண்டான வறுமை அவனை மிகவும் நெருக்கியது. தன் குடும்பம் படும் கஷ;டத்தை அனுதினமும் கண்ட தினாலே அவன் மனம் விரக்தியடைந்தது. தேவ பகத்தியை பற்றி சிலர் பேசும்போது அவன் மனமோ கசப்பால் நிறைந்திருந்தது. நிலைமை அவனுக்கு சாத்தியமற்றதாக இருந்ததினால், அநியாயமான வழியிலே உழைத்து வரும் தன் பழைய நண்பர்களோடு சேர்ந்து கொள்ளும்படி தன் மனதிலே தீர்மானம் செய்து கொண்டான். வறுமையானது அவ னுக்கு கொடுமையாக இருந்ததால், அவன் திருடிக் கொண்டாலும் என்ன என்ற மனநி லையுடையவனானான். பிரியமான சகோதர சகோதரிகளே, ஐசுவரியம் கண்ணியை வரவிக்கும் என்றும் ஏழ்மையானது பரிசுத்த த்தை உண்டு பண்ணும் என்றும் சிலர் பொருளாதார அளவகோலால் பரிசுத்த்தையும் அநியாயத்தை வகை யறுத்துக் கொள் கின்றார்கள். இந்த உலகிலே ஐசுவரியவான்கள் மாத் திரம் துன்மார்க்கமான வழிகளிலும், வறியவர்களும் யாவரும் சன்மார்க மான வழிகளிலும் வாழ்கின்றார்களா? அல்லது எண் ணங் கொண்ட வர்களாக இருக்கின்றார்களா? வறியவர்கள் மறக்கப்ப டுவதில்லை ஐசு வரியவான்கள் மாத்திரம் சன்மார்க்கமான வழிகளிலும், வறியவர்களும் யாவரும் துன்மார்கமான வழிகளிலும் வாழ்கின்றார்களா? பொருளா தார ஏற்றத்தாழ்வு துன்மார்க்கத்தையும் சன்மார்க்கத்தையும் வகையறுப்பதில்லை. ஒரு மனிதனானவன், எந்த நிலைமை யிலே இருந்தாலும், தனக்குண்டான பெலத்தினாலும் பரிசுத்தத்தமடைய முடியாது, பரிசுத்த வாழ்விற்கு தேவ பெலன் தேவை என்று தன்னை தாழ்த்தும் எளிய மனமுடையவனாக இருந்தால், அவன் தேவன் பெயரில் கொண்டுள்ள நம்பிக்கையானது வீண்போவதில்லை. பண ஆசையானது எல்லா தீமை க்கும் வேராக இருக்கின்றது. வறுமையானது மனிதர்களை அநியாயமான வழிகளுக்கு தள்ளிப்போடும். ஆனால், உயர்விலும், தாழ்வி லும், சோதனையிலும், வேதனையிலும் தேவனையே தன் நம்பிக்கையாக பற்றிக் கொண்டு வாழ்கின்ற மனுஷன், தேவனுக்கு பிரியனும், ஆசீர்வதிக்கப்பட்டவனுமாக இருக்கின்றான்.

ஜெபம்:

வறட்சியான காலத்திலும் கனி கொடுக்கும்படி என்னை ஏற்படுத்திய தேவனே, நான் உலகத்தின் பொருளாதார நிலைமையை பற்றிக் கொள்ளாமல், உம்மை பற்றி கொண்டு வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 62:9-10

Category Tags: