புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 08, 2024)

'எதிர்காலம்'

சங்கீதம் 32:8

நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.


ஒரு ஊரிலே பொருளாதார நெருக்கடியினால் உண்டான வேலை யில்லா பிரச்சனையினாலே, அந்த ஊரிலுள்ள பெரும்பான்iயான ஜனங்கள் பாதிக்கப்பட்டார்கள். அந்த ஊரிலே திருப்பதியாக வாழ்ந்து வந்த குறிப்பிட்ட குடும்பத்தினருடைய பொருளாதர நிலைமை மிகவும் மோசமடைந்ததால், பிள்ளைகளுடைய எதிர்கால நலனைக் கருதி, தூரத்திலுள்ள செழிப்பான ஊரொன்றுக்கு சென்று குடியேறினார்கள். அவர்கள் வாழ்விலிருந்த பொரு ளாதர நெருக்கடியான நிலைமை யானது சில மாதங்களுக்குள்ளே நிவ ரித்தியானது. ஒரு குடும்பமாக சிறு பிள்ளைகளோடு வாழ்க்கையானது சந்தோஷமாக போய் கொண்டிருந் தது. பிள்ளைகள் வளர்ந்து வாலிப நாட்களை அடைந்த போது, புதிய ஊரிலுள்ள நாட்டின் நடப்பையும், நாகரீகத்தையும் பிள்ளைகள் தவிழுக் கொண்டார்கள். அது மட்டுமல்ல, அந்த தேசத்திலுள்ள வாலிபர்களுக்கு இருந்த சுதந்திரத்தினால், குடும்ப வாழ்க்கைக்கு ஏற்புடையதல்லாத சில தவறான வழிகளை பற்றிக் கொண்டதால், பெற்றோர்கள் மிகவும் மன வேதனை அடைந்தார்கள். அவர்கள் தாங்கள் விட்டு வந்த ஊரிலேயே வாழ்ந்திருக்கலாம் என் றும் தங்களுக்குள்ளே பேசிக் கொண்டார்கள். அவர்கள் வாழ்ந்து வந்த ஊரிலே கஷ;டங்கள் உண்டானதால், வாழ்வாதாரத்திற்காக வேறு வழிய களை தேடுவது நியாயமானது. ஆனால், அந்த வழியிலே அவர்கள் எதிர்பார்க்கும் முடிவு உண்டாகுமோ என்பதை அவரவர் சிந்;தித்து பார்க்க வேண்டும். பிள்ளைகளுடைய எதிர்கால நலனுக்காக, ஊரில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுதலையடைய வேண் டும் என்ற நோக்கம் நிறைவேறியது. ஆனால், பிள்ளைகளுடைய எதிர் காலமோ அவர்கள் நினைத்த பிரகாரமாக அமையாமல் போயிற்று. மனிதர்களுக்கு செம்மையாக தோன்றும் வழிகள் எல்லாம் தேவனு டைய வழிகள் அல்லவே. பொருளாதார மலர்ச்சி சம காலத்திலே மன மலர்ச்சியை உண்டாக்கலாம் ஆனால், அந்த மன மலர்சியானது நீடித்திருப்பதும் இல்லை, அதை அடைந்தவருக்கு மனநிறைவை கொடு ப்பதுமில்லை. எனவே, தீர்மானங்களை எடுக்கு முன் கர்த்தருக்காக காத்திருங்கள். நீங்கள் எங்கு சென்றாலும், எந்த நிலையிலும் தேவ ஆலோசனையின் வழியிலே நடந்து கொள்ளுங்கள்.

ஜெபம்:

என்னை பெயர் சொல்லி அழைத்த தேவனே, என் வாழ்வில் என்னுடைய சுய வைராக்கியத்தின்படி கிரியைகளை நடப்பிக்காமல், உம்முடைய சித்தத்தின்படி நான் வாழ என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எரேமியா 29:11-12