புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 07, 2024)

எக்காலமும் எக்காலமும் மாறாதவர்

சங்கீதம் 62:8

ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நம க்கு அடைக்கல மாயிருக்கிறார்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த குடும்பத்தினர், எதிர்பாராதவிதமாக பெரும் பொருளாராதர நெருக்கடியை சந்தித்தார்கள். அடுத்த வேளை தங்கள் பிள்ளைகளுக்கு எதை உண்ணக் கொடுப்போம் என்ற அளவிற்கு சூழ் நிலைகளை மோசமாக இருந்ததால், அவர்கள் தங்கள் வாழ்விலே முன் னொருபோதும் எதிர்நோக்காத சோதனைக்கு முகங்கொடுக்க வேண்டி யிருந்தது. அவரகளுடைய சின்ன மகளானவள் சிறு பிள்ளையாக இரு ந்ததால், அவளுடைய பெற்றோ ரின் நெருக்கடியான நிலைமையை அறிந்து கொள்வதற்குரிய அறிவோ அல்லது அவர்களுக்கு உதவுவத ற்குரிய பெலமோ அவளிடம் இல்லை. அவள் வழமைபோல தன் பாடசாலையில் கொடுக்கப்பட்ட வீட்டு வேலைகளை செய்வதிலும், அதன் பின்னர் அயலிலுள்ள சிறு பிள்ளைகளோடு விளையாடுவதி லும் நோக்கமுள்ளவளாக இருந் தாள். அவர்களுடைய மூத்த மகனானவன் வாலிப பிரயாசத்திலிரு ந்ததால், அவன் பெற்றோரின் பாடுகளை அறிந்திருந்தான். ஆனால், அவனால் ஏதும் பெரிதாக செய்ய முடியவில்லை. இது பெற்றோரின் திட்டமிடாத வாழ்வின் தவறு, அவர்கள் இதை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தனக்குள்ளே சிந்தித்துக் கொண்டவனாக, தன் நண்பர்களை சந்திக்க சென்று விட்டான். இப்படியாக மனிதர்களுடைய வாழ்விலே ஒவ்வொரு காலத்திற்குரிய அறிவும், சிந்தனையும், சவா ல்களும் வேறுபட்டதாகவே காணப்படுகின்றது. அந்தப் பெற்றோரின் பிள்ளைகள், வளர்ந்து தங்கள் சொந்த குடும்பங்களை விசாரிக்கின்ற நாட்களிலே, அவர்கள் பெற்றோர் கடந்து சென்ற சவால்களை ஒரு அள விற்கு புரிந்து கொள்வார்கள். ஆனால், இது வாழையடி வாழையாக செல்லும் வாழ்க்கை வட்டமாகவே கடந்து செல்கின்றது. 'ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது. பூமியோ என்றைக்கும் நிலைத்திரு க்கிறது. சூரியன் உதிக்கிறது, சூரியன் அஸ்தமிக்கிறது. தான் உதித்த இடத்திற்கே அது திரும்பவும் தீவிரிக்கிறது.' (பிரசங்கி 1:4-5)ஆனால் நம்முடைய தேவனோ, எக்காலமும் மாறதவராக இருக்கின்றார். அவரே நம்முடைய அசையாத நம்பிக்கை. அவர் சமுகத்தில் உங்கள் இரு தயத்தை ஊற்றிவிடுங்கள்;. அவரே நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்.'

ஜெபம்:

எக்காலமும் மாறாத தேவனே, நான் என் வாழ்வின் நோக்கத்தை மறந்து போய்விடாமல், உமக்கு பயந்து, ஞானமுள்ளவனாய் நடந்து கொள்ளும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 34:8-10