புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 06, 2024)

இன்று இப்போது செய்யப்பட வேண்டியவைகள்

பிரசங்கி 3:1

ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.


'பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு. நட ஒரு கால முண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு.' என்று பிரசங்கி ஒவ்வொ ன்றிற்கும் ஒரு காலமுண்டு என்று விவரித்து கூறியிருக்கின்றார். ஒரு விவசாயியானவன், நிலத்தைப் பண்படுத்தி, விதை விதைக்கின்ற நாட்களிலே, தற்காலத்திற்குரிய வேலைகளிலும், சவால்களை மேற்கொள்வதிலும் அதிக கவனமுள்ளவனாக இருப்பான். விதைவிதைத்த பின், சில கிழமைகளுக்கு பின் பயிர்கள் வளர்ந்து வரும்போது அதை பராம ரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், விதைக்கின்ற நாட்களிலே, விதைப்பை குறித்தே சிந்தையுள்ளவனாக இருப்பான். அது போல, அறுக்கின்ற நாட்கள் வரும் என்று அவனுக்கு தெரிந்தாலும், அந்த நாட்களுக்குரிய வேலைகளை இப்போதே சிந்தித்து அதிக பார மடையாமல், தற்போதுள்ள வேலைகளை சீராக செய்து முடிப்பதிலேயே கவனமுள்ளவனாக இருப்பான். இன்று மனிதர்கள், தங்கள் பிள் ளைகள் குழந்தைகளாக இருக்கும் போதே அவர்களுடைய எதிர்கால த்தைக்குறித்தும் அதிகமதகமாய் கவலையடைகின்றார்கள். அதன்பொ ருட்டு, ஓடி ஓடி அயராது உழைத்து சேமிக்க ஆரம்பிக்கின்றார்கள். அத னால், தங்கள் பிள்ளைகளை சிறு வயதிலே நடக்க வேண்டிய வழி யிலே நடத்த தவறி விடுகின்றார்கள். அதன் விளைவாக பிள்ளைகள் சிறு வயத்திலே எதை கற்றுக் கொள்ளுகின்றார்களோ, அவர்கள் முதிர்வய திலும் அவ்வழியையே பற்றிக் கொள்கின்றார்கள். (நீதி 22:6). ஒருவன் பாடசாலை நாட்களிலே கல்வி கற்காமல் வேறு அலுவலாக இருந்த தினால், குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்த பின்பு, பல நெருக்கடி களை எதிர் நோக்கினான். அவன் தன் வேலை செய்யும் நேரத்திலே, வேலை யில் கவனம் செலுத்தாமல், நான் பாடசாலையில் கற்ற தவறிவிட்டேன் என்று தன் கவலையை மறக்க மதுபானம் அருந்த ஆரம்பித்தான். அத னால், நாளடைவிலே வேலையை இழந்து போனான். பிரியமான வர்களே, 'நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன் னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.' என்று நம்முடைய ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கி ன்றார். அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்;. எனவே அவருடைய பலத்த கரங்களுக்குள்ளே அடங் கியிருங்கள்.

ஜெபம்:

என்னை இரட்சித்த தேவனே, நான் கடந்த காலத்தையும், எதிர் காலத்தையும் சிந்தித்து துக்கிக்து கொண்டிராமல், நிகழ்காலத்திலே செய்ய வேண்டியவைகளை உம் சித்தப்படி செய்து முடிக்க கிருபை செய் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:25