புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 05, 2024)

வறுமையும் செழிப்பும்

பிலிப்பியர் 4:11

நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.


இந்த உலகத்தின் போக்கில் வாழ்பவர்களை பாருங்கள், 'மரணபரி யந்தம் அவர்களுக்கு இடுக்கண்களில்லை. அவர்களுடைய பெலன் உறுதியாயிருக்கிறது. இவர்கள் என்றும் சுகஜீவிகளாயிருந்து, ஆஸ் தியைப் பெருகப்பண்ணுகிறார்கள்.' நாமோ, எவ்வளவாய் நல் வழியிலே நடந்தாலும், எவ்வளவாய் கஷ;டங் களை சகித்து கொள்ள வேண்டியி ருக்கின்றது என ஒரு விசுவாசியா னவன், தன் பெலவீனத்திலே, தன க்குள் நொந்து கொண்டான். பரி சுத்த வேதாகமத்திலே காணப்படும் பரிசுத்தவான்களில் சிலர், தங்கள் வாழ்வில் ஒரு கட்;டத்திலே இப்ப டியாக பேசிக் கொண்டார்கள். அப்படி பேசியவர்கள், தேவனை அறி கின்ற அறிவிலே வளரும் போது, தாங்கள் காரிய மறியாத மூடர்க ளைப் போல தவறாக பேசிக் கொண்டோம் என்று மனம் வருந்திக் கொண் டார்கள். இன்றும் சில விசுவாசிகள், தேவனுடைய வழி கடின மானது, நாங்கள் இந்த உலக போக்கிலே வாழும் மனிதர்களைப் போல வாழ்ந்துவிட்டால் பிரச்சனை இல்லை என்றே சில வேளை களிலே எண்ணிக் கொள்கின்றார்கள். பொருளாதார நிலைமையே இவற்றிற்கெ ல்லாம் முக்கிய காரணிகளிளொன்றாக காணப்படுகின்றது. விசுவாசிக ளின் வாழ்விலே பொருளாதார நெருக்கடி தலைதூக்கும் போது, அவர் களுக்கு உண்டாகும் நெருக்கத்தினாலே, இந்த உலகிலே தங்களுக்கு உண்டாகும் கஷ;டங்களைக் குறித்து மனம் சொந்து கொள்கின்றார்கள். பொருளாதார நெருக்கடி மறைந்து, தங்கள் வாழ்வில் செழிப்பு உண் டானால், பிரச்சனைகள் இன்றி, மனமகிழ்சியுடன் வாழலாம் என்று சில விசுவாசிகள் எண்ணிக் கொள்கின்றார்கள். வேறு சிலர், உலகத்தின் செல் வம் பெருகினால் அது தேவனுடைய ஆசீர்வாதம் என்று கூறிக் கொள் கின்றார்கள். ஒருவேளை அவர்கள் கூறுவதுபோல, அவர்களுடைய வாழ் க்கையிலே அந்தக் காரியம் உண்மையாக இருந்தாலும், அவர்களு க்கு இந்த உலகத்திலே பிரச்சனைகள் முடிந்து விட்டது என்பது பொருள் அல்ல. பொருளாதார நெருக்கடியினால் வாடுவதினாலும், பொருளாதார செழிப்பிலே சுகித்திருப்பதினாலும், ஒருவன் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ள முடியாது. உயர்விலும் தாழ்விலும் பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை செய்ய தங்களை ஒப்புக் கொடுக்கின்ற வர் களே தேவ ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்கின்றார்கள். எனவே நாம் நம்முடைய விசுவாச அறிக்கையிலே உறுதியாய் இருப்போமாக.

ஜெபம்:

பரலோக தேவனே, என் பெலவீன நாட்களிலே, என் கால்கள் தடுமாறும் போது, நான் விசுவாசத்திற்கு விரோதமான காரியங்களை அறிக்கை செய்யாதபடிக்கு, விசுவாசத்திலே உறுதியாய் நிலைத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 73:24