புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 04, 2024)

நடைமுறை பரீட்சைகள்

சங்கீதம் 119:100

உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப்பார்க்கிலும் ஞானமுள்ளவனா யிருக்கிறேன்.


ஒரு பெற்றோரானவர்கள் தங்கள் மகனானவனை சின்ன வயதிலிருந்தே நல் வழியிலே நடத்தி வந்தார்கள். அவன் பாடசாலையிலே கல்வி கற் கும் நாட்களிலும், மேற்படிப்புக்காக பல்கலைகழகத்திலே படித்த நாட் களிலும், எல்லா பரீட்சைகளிலும் அவன் அதிக புள்ளிகளுடன் விசேஷட சித்திகளை பெற்றுக் கொண்டான். பட்டப்படிப்புக்களை முடித்த பின்பு, அவன் எல்லாக் காரியங்களிலும் அறிவுள்ளவனாக இருந்தான். பெற் றோர்களானாலும், அவனுடைய பட்டானார், பாட்டியோ எந்தக் காரி யத்தைக் குறித்து அவனுக்கு அறி வுரை கூறினாலும், அதற்கு தகுந்த பதில்களை கொடுக்கும் அளவிற்கு அவனுடைய புத்தக அறிவும் அதிக மாகயிருந்தது. அதனால், அவன் தன் வாழ்விலே பரீட்சைகள் முடி ந்துவடைந்து விட்டது. என் பெற் றோர் போலல்லாது, எல்லா விட யங்களையம் நான் இலகுவாக தீர்த்துக் கொள்வேன். நான் எல்லாம் அறிந்தவன் என்ற எண்ணமுடையவனாக இருந்து வந்தான். அவனுக்கு அநேக விடயங்களிலே புத்தக அறிவு இருந்தது உண்மை, ஆனால், தன் வாழ்வின் நடைமுறை (Pசயஉவiஉயட வுநளவள) பரீட்சைகள் இருக்கின்றது என்பதை அவன் சற்றும் உணராதிருந்தான். வாழ்க்கையின் சூழ்நிலை களை அவன் தனியாக முகங் கொடுக்க வேண்டிய நாட்கள் வந்த போது, தன் புத்தக அறிவினாலே அதிக பயன் இல்லை என்பதையும், மனித வாழ்விலே பரீட்சைகளுக்கு முடிவில்லை என்பதையும் தானா கவே உணர ஆரம்பித்தான். பிரியமான சகோதர சகோதரிகளே, இது வாலிபருக்குரிய தியானம் மட்டுமல்ல. இது யாவருக்கும் உரிய தியா னம். நாம் ஏன் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து, தியானிக்கின்றோம்? நாம் தேவனுடைய வாக்குத்தங்களை காலையிலும் மாலையிலும் அறி க்கை செய்துவிட்டு, பின்பு வீட்டிலும், கல்வி நிலையங்களிலும், வேலை யிலும், சபையிலும், வெளி இடங்களிலும் நமக்கு ஏற்படும் சூழ்நிலை களை நம்முடைய அறிவுக்கும் உணர்வுக்கும் ஏற்றபடி தீர்த்து வைப்பத ற்காகவா? இல்லை! நாம் கற்றுக் கொண்ட வேத வார்த்தைகளினால், நம் அனுதின வாழ்வின் நடைமுறை பரீட்சைகளை மேற்கொள்ள நம்மை நாமே பயிற்சிவிப்பதற்காகவே. வேத வார்த்தைகளை கற்பது அவசியம் ஆனால் அவைகளால் நாம் எச்சரிக்கப்படும் போது, நாம் அவைக ளைக் கைக் கொண்டால் அவைகளினால் நமக்கு மிகுந்த பலன் உண்டு.

ஜெபம்:

என் கால்களுக்கு தீபமும் பதைக்கு வெளிசமுமான ஜீவ வார்த்தைகளை எனக்கு தந்த தேவனே, நான் அந்த வார்த்தையின் வெளிச்சத்திலே நடக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 19:7-11