புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 30, 2024)

அழைப்பின் கருப்பொருள்

கலாத்தியர் 5:13

இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழிய ஞ்செய்யுங்கள்.


பெரிய பட்டணமொன்றிலே சுதந்திரமாக வாழ்ந்து வந்த மனிதனானவன், தன் ஓய்வூதிய நாட்களை தூரத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட கிராமமொன் றிலே கழிக்க வேண்டும் என்ற ஆசையுடன், குறித்த கிராமத்திலே ஒரு அழகான வீட்டை கட்டுவித்தான். அந்தக் கிராமமானது, இயற்கையா கவே அழகும், எழிலும் உள்ளதாகவும், வளி (Air) மாசற்றதாகவும் இருந்தது. ஏனெனில், அந்த கிராமத்தில் வசித்து வந்தவர்கள், தங்கள் சொந்த நலன்கருத்தி, அக்கிராமத்தின் சூழல்தொகுதியை மாசுபடுத்தாமல், தொண்டு தொட்டு, அந்த கிராமத் தின் இயற்கை அழகை பேணிப் பாதுகாக்கும்படிக்கு அக்கிரமத்தி ற்கு ஏற்றபடி வாழ்வதை இயல்பாக்கிக் கொண்டு வந்தார்கள். தன் ஓய்திவூதிய நாட்களை கழிக்க வந்த மனிதனானவனோ, அந்த கிராமத்தின் யாப்பு நூலையையும், சட்டதிட்ட ஒழுங்கு முறைகளையும் மிகவும் கிரத்தையுடன் படித்து வந்தான். அந்த நூலின்படி, தான் ஆசையுடன் பட்டணத்திலே செய்து வந்த கிரியைகளில் எதையெல்லாம, குற்றம் சாட்டப்படாமல் செய்யலாம்? கிராமத்தின் நீதிமன்றத்தின் முன்னையிலே எதையெல்லாம், தான் ஜெயித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடனேயே அவைகளை படித்து வந்தான். சுருக்கமாக கூறப்போனால், தான் மாசற்ற அந்தக் கிராமத்திலே வாழ வேண்டும், ஆனால் தன் வாழ் க்கையை அதற்கேற்றபடி முற்றாக மாற்றாமல், தன் இச்சைகளை சட்ட பூர்வமாக நடப்பிக்க வழிகளை தேடி வந்தான். ஆம் பிரியமான சகோ தர சகோதரிகளே, இன்று தங்களை விசுவாச மார்க்கத்தார் என்று கூறிக் கொள்ளும் சிலர், அந்த மனிதனானவனைப் போலவே வாழ விரும்பு கின்றார்கள். அவர்கள் வாழ்வதற்கு உலகத்திலே எத்தனையோ இடாம்பீகரமான, மனிதர்களினாலே போற்றப்படும் இடங்கள் அநேக மாயி ருந்தும், கர்த்தருடைய வீட்டிலே, வாழ வேண்டும், கர்த்தருடைய நாமத்தை தரிக்க வேண்டும் ஆனால், தங்களுக்குள் இருந்து வந்த பழைய இச்சைகளை, சட்டபூர்வமாக அனுபவிப்பதற்கு வேதத்தை ஆராய்ந்து பார்க்கின்றார்கள். சத்திய வேதத்தின் கருப்பொருளாகிய நித்திய ஜீவனை கண்ணோக்காமல், தங்கள் இச்சைகளை நிறைவேற்ற வெகுவாய் பிரயாசப்படுகின்றார்கள். நீங்களோ, அப்படியான எண்ணங்கொள்ளாமல், பரம பந்தையப் பொருளின் இலக்கை நோக்கி முன்னேறுங்கள்.

ஜெபம்:

சுயாதீனத்திற்கென்று என்னை அழைத்த தேவனே, என் எண்ணங்களை நிறைவேற்ற வழிகளை தேடாமல், அழைப்பின் இலக்கை நோக்கி நான் முன்னேறும்படிக்கு உணர்வுள்ள இருயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 2:16