புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 28, 2024)

உணர்வற்ற அடிமைத்தனங்கள்

ரோமர் 6:16

எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடி மைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?


ஒரு வாலிபனானவன், தன் அயலிலுள்ள சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது, இடைவேளையிலே, தெருவின் மேற்புறமாக வசிக்கும் பணக்கார குடும்பத்தை சேர்ந்த இன்னுமொருவன், அந்த வாலிபனை நோக்கி: தாங்கள் உயர்ந்த வகுப்பை சேர்ந்த, செல்வாக்கு நிறைந்த, ஆசீர்வதிக்கப்பட்ட கிறிஸ்தவ வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்றும், தங்கள் ஆலய பீடம் பளிங்கு கற்களால் கட்டப்பட்டிருக்கின்றது என்றும் தன்னுடைய குடும் பத்தார் சொன்னார்கள் என்று தன் குடும்பத்தைப் பற்றி பெருமிதமாக கூறிக்கொண்டான். ஏன் அப்பா, நம்மு டைய சபை இப்படி ஏழ்மையாகவும், தாழ்மையாகவும் இருக்கின்றது? கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கவில்லையா என்று ஒரு மகனானவன், தன் தகப்பனானவரிடம் கேட்டுக் கொண்டான். அதற்கு தகப்பனானவர் தன் மகனானவனை நோக்கி: மகனே, இந்த உலகிலே வாழும் சில விசுவாசிகள், தங்களை அறியாமலேயே பற்பல அடிமைத்தனங்களுக்குள்ளே சிக்கியிருக்கின்றார்கள். தங்களை மேன்மக்கள் என்றும் மற்றவர்களை கீழ்மக்கள் என்றும் இந்த உலகத்தின் சமுக அந்தஸ்தின் அளவுகோலின்படி அவர்கள் தேவ பிள்ளைகளை வேறு பிரிப்பதினாலே, அவர்கள் சமுக அந்தஸ்துக்கு அடிமைகளாக இருக்கின்றார்கள். அவர்கள் அறி யாமைக்காக நீ ஜெபம் செய்ய வேண்டும். நாம் கூடி ஆராதிப்பதற்கு ஒரு ஆலயக் கட்டிடம் தேவை ஆனால் அதை விலையுயர்ந்த வஸ் துக்களால் அலங்கரிப்பதைவிட, நாம் நம் உள்ளத்தை ஆவியின் கனிகளால் அலங்கரித்து, தாழ்மையுள்ள இருதயத்தோடு, தேவனுடைய சமுகத்திற்கு செல்லவேண்டும். இந்த உலகத்தின் மேன்மைகளினால், ஒருவ னும் தேவனைக் கவர்ந்து கொள்ள முடியாது. தேவனுடைய வார்த்தையின்படி வாழ்ந்து, பிதாவின் சித்தத்தை நிறை வேற்றுகின்றவர்கள்மேல் அவர் பிரியமாக இருக்கின்றார். எனவே, நீ மனத்தாழ்மையோடு நமக்கு கிடைத்த தேவனுடைய கிருபையைக் குறித்தே மேன்மைபாராட்டு என்று தகப்பனானவர் அறிவுரை கூறினார். ஆம், பிரியமான சகோதர சகோதரிகளே, இன்று சில விசுவாசிகள் சமுக அந்தஸ்து என்னும் அடிமைத்தனத்திலே அகப்பட்டு வஞ்சிக்கப்பட்டு போய்விடுகின்றார்கள். நீங்களோ, ஜாக்கிரதையுள்ளவர்களாக நடந்து கொண்டு, தேவ கிருபையையும், கர்த்தருடைய சிலுவையையுமேயன்றி வேறொன் றையும் குறித்து மேன்மை பாராட்டாதிருப்பீர்களாக.

ஜெபம்:

கிருபையினாலே இரட்சித்த தேவனே, மறுபடியும், என்னிட த்திலுள்ளவைகளை குறித்து நான் மேன்மைபராட்டாதபடிக்கு, மனத்தாழ்மையோடு உம்மை சேவிக்க உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 2:15