தியானம் (சித்திரை 25, 2024)
நீதியின் பலன்
ரோமர் 2:6
தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.
'போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக என்றும், வேலையாள் தன் கூலி க்குப் பாத்திரனாயிருக்கிறான்' என்ற, வேதவாக்கியத்தை நாம் அறிந்தி ருக்கின்றோம். கர்த்தருடைய சேவையில் பிரயாசப்படுகின்ற ஊழியன் தன் பிரயாசத்திற்கு தக்க கூலிக்கு பாத்திரவனாக இருக்கின்றான். அந்த கூலியானது அநீதியாக உண்டான கூலியோ, அல்லது அருவருப்புக்கு ரியதானதாகவோ இல்லாமல், அது நீதியினால் உண்டான கூலியாக இரு க்கின்றது. சீரிய ராஜாவின் படைத்த லைவனாகிய நாகமான் என்பவன் குஷ; டரோகியாக இருந்ததால், சொஸ் மடையும்படி, இஸ்ரவேலிலே இருந்த தீர்க்கதரியாகிய எலிஷhவை சந்திக்கு ம்படி, நாகமான் தன் குதிரைகளோ டும் தன் இரதத்தோடும், வெகுமதிகளோடும் வந்து எலிசாவின் வாசற் படியிலே நின்றான். தீர்க்கதரிசியானவன், அவன் குணப்படும்படிக்கான வழியை அவனுக்கு சொன்னான். ஆரம்பத்திலே அவன் எதிர்த்து நின்றபோதும், பின்னர், தீர்க்கதரிசியானவன் சொன்னபடி செய்து பூரண மாக சொஸ்தமடைந்தான். அவன் மறுபடியும் தீர்க்கதரிசியிடம் வந்து, அவரை நோக்கி: இப்போதும் உமது அடியேன் கையில் ஒரு காணி க்கை வாங்கிக்கொள்ளவேண்டும் என்றான். அதற்கு தீர்க்கதரியானவன்: நான் வாங்குகிறதில்லை என்று கர்த்தருக்கு முன்பாக அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்;. வாங்கவேண்டும் என்று அவனை வருந்தினாலும் தட்டுதல் பண்ணிவிட்டான். ஆனால் எலிசாவின் வேலைக்காரன் கேயாசி, நாகமானின் காணிக்கையை இச்சித்து, இழி வாக ஆதாயத்தை பின்தொடர்ந்து, பொய்யை கூறி, அதை அவனிடம் கேட்டு வாங்கிக் கொண்டான். அதனால், அவன், நாகமானின் குஷ;டரோ கத்தை தனதாக்கிக் கொண்டான். பிரியமான சகோதர சகோதரிகளே, நாம் பரிசுத்த வாழ்வு வாழும்படிக்கு வேறு பிரிக்கப்பட்டிருக்கின்றோம். தேவ சேவையின் பாதையில் கஷ;டப்பட்டாலும் நஷ;டப்பட்டாலும் அது தேவனுடைய பார்வையில் பரிசுத்த அலங்காரமாக இருக்கும். அந்த அலங்காரத்தை அநீதியின் ஊதியத்தினாலே மாசுபடுத்திவிடக்கூடாது. கர்த்தர் தம்முடையவர்கள் மேல் நோக்கமாயிருக்கின்றார். அவர் ஒருபோதும் மறந்து போகின்ற தேவனல்லவே. எனவே மனம்பதறி தீவிரமாக தவறான தீர்மானங்களை எடுத்துவிடாமல் அவருடைய நேரத் திற்காக காத்திருங்கள். உங்கள் நீதியின் பிரயாசங்களை அறிந்த தேவன், நீதியின் பலன்களைஉ ங்கள் வாழ்வில் கட்டளையிடுவார். அதன் முடிவு சமாதானமாக இருக்கும்.
ஜெபம்:
பரிசுத்தத்திற்கென்று என்னை வேறு பிரித்த தேவனே, இக்க ட்டான நாட்களை நான் கடக்க நேர்ந்தாலும், இழிவான அநீதியின் ஆதயத்திற்கு இணங்காமல் இருக்க மனப்பிரகாசமுள்ள கண்களை தந்து நடத் துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - நீதி 10:2