தியானம் (சித்திரை 24, 2024)
ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகாத இருதயம்
எபிரெயர் 3:12
சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களிலொருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார். (சங்கீதம் 113:7-8) என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப் படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. (சங்கீதம் 23:5) இந்த வசனங்க ளானது அநேகரால் விரும்பி கூற ப்படும் வாக்குத்தத்தங்களாக இருக்கின்றது. வாக்குமாறாத சர்வ வல்லமையுள்ள தேவனா கிய கர்த்தர் இவைகளை தம் முடைய பிள்ளைகளுடைய வாழ் க்கையிலே நிறைவேற்றி முடிக் கின்றவராயிருக்கின்றார். ராஜா க்களோடு உட்காரும் போது, பகைவர் முன்பாக பந்தியிருக்கும் போதும், உங்களுடைய மனதிலே தோன்றும் எண்ணங்கள் என்ன? நீங்கள் சிறுமைப்பட்ட நாட்களில், உயர் ஆசனங்களிலிருப்பவர்கள் பெருமை கொண்டு உங்களை அற்பமாக எண் ணி, நகைத்த போது, அவர்களை நகைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகின்றதா? நீங்கள் உயர்ந்த ஸ்தானங்களிலே உட்காரும் போது, சிறுமைப்பட்டவர்களை நீங்கள் எப்படியாக கண்டு கொள்கின்றீர்கள்? நம்முடைய தேவனாகிய கர்த்தர், உன்னதத்திலே வாழ்ந்தாலும், அவர் எப்போதும் சிறுமைப்பட்டவர்கள்மேல் நோக்கமாகயிருக்கின்றார். தாழ்மை யுள்ளவனுக்கு கிருபையை அளித்து, பெருமையுள்ளவனை தூரத்திலிரு ந்து அறிகின்றார். உன்னத்திலே வாழும் தேவன்தாமே, காரணமின்றி காரியங்களை செய்வதில்லை. இந்த உலகத்தின் உயர்ந்த ஸ்தானங்க ளிலே அமர்வதினால் ஒருவன் நித்திய ஜீவனை அடைந்தாயிற்று என் பது பொருளல்ல. அந்த உயர்ந்த ஸ்தானங்களில் உடக்காருகின்ற சிலர், வேதத்தை மறந்து போய்விடுவதால், அந்த உயர்ந்த ஸ்தானமானது அவர்களுக்கு கண்ணியாக மாறிவிடுகின்றது. சாலமோன் ராஜாவிற்கு தேவனானவர், உலகத்கோர் வியக்கத்தக்க ஞானத்தையும், மிகையான ஐசுவரியத்தையும் கொடுத்தார். காலங்கள் கடந்து சென்ற போது, அவ னோ கர்த்தரை விட்டுத் தன் இருதயத்தைத் திருப்பி, அவர் கற்பித்த தைக் கைக்கொள்ளாமற் போனதினால் கர்த்தர் அவன்மேல் கோப மானார். எனவே எந்த ஸ்தானத்திலிருந்தாலும் கர்த்தரைவிட்டு விலகா தபடி உங்கள் இருதயத்தை காத்துங் கொள்ளுங்கள்.
ஜெபம்:
அழைத்த தேவனே, பாவத்தின் வஞ்சனையினாலே என் இருதயம் கடினப்பட்டுப் போகாதபடிக்கு, உம்முடைய வார்த்தைகளின்படி நான் நடக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - உபாகமம் 30:15-20