புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 23, 2024)

யார் ராஜரீக ஆசாரிய கூட்டம்?

வெளிப்படுத்தல் 1:6

தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம் மை ராஜாக்களும் ஆசாரி யர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டா யிருப்பதாக. ஆமேன்.


ஆண்டவராகிய இயேசு தாமே, பிதாவாகிய தேவனுக்கு முன்பாக 'நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக' ஏற்படுத்தியிருக்கின்றார். அப்படியாக யாரை அவர் ராஜாக்களாகவும், ஆசாரியர்களாகவும் ஏற்படுத் தியிருக்கின்றார்? ஐசுவரியவான்களையா? கல்விமான்களையா? அதிகா ரிகளையா? அல்லது ஏழை எளியவர்களையா? ஆண்டவராகிய இயேசு வழியாக உண்டான இரட்சிப்பை பெற்றுக் கொண்டவர்கள் யாவரை யும், அந்தகார இருளிலிருந்து ஆச்சரியமான ஒளிக்கு கொண்டுவந்தார். இந்த வேத இரகசியங்களை பரிசுத்த ஆவியின் உந்ததலினால், ஆண்டவர் இயேசுவின் பிரதான அப்போஸ்தலராகிய சீமோன் பேதுரு-அவர்கள் எழுதியிருக்கின்றார். அவர் பிரதான அப்போஸ்தலராக இருந்தும், அவருடைய வாழ்வு எப்படியாக இருந்தது? அவர் இந்த உலகத்தின் ராஜாக்களோடு பந்தியிருந்து ராஜாவின் உயர் ரக போஜனங்களை உண்டு வந்தாரா? அல்லது எப்பொழுதும் தன்னை துன்பப்படுத்துகின்ற எதிரிகளுக்கு முன்பாக அவர் பந்தியிருந்தாரோ? இல்லை. அவர் பாடுகள், வேதனைகள், துன்பங்கள் மத்தியிலும், முறுமுறுக்காமல், தன்னை அழைத்த எஜமானனாகிய ஆண்டவர் இயேசுவைப் போல, அவைகளை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு, பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை தன் வாழ்விலே செய்து முடித்தார். இன்றும் அநேக தேவ பிள்ளைகள், இந்த உலகத்திலே பல கஷ்டங்கள் துன்பங்கள் மத்தியிலே விசுவாச வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்கள். அனுபவிக்கின்றார்கள். அவர்கள் யாவரையும், ராஜாக்களாக ஆசாரியர்களாக அவர் ஏற்படுத்தியிருக்கின்றார். அது எப்படி ஆயிற்று? ஆண்டவராகிய இயேசு வழியாக, நாம், நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும், ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக் கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிற வரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காண க்கூடாதவருமாயிருக்கிற பிதாவாகிய தேவனுக்கு பிள்ளைகளாக இருக்கின்றோம். நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணியிருக்கின்றார். அவர் வழியாக, அவரை விசுவாசிக்கின்ற நாம் யாவரும், ராஜரீக ஆசாரிய கூட்டமாக ஏற்படுத்ப்பட்டிருக்கின்றோம்.

ஜெபம்:

ராஜாதி ராஜாவாகிய தேவனே, நீர் என்னை உம்முடைய பிள் ளையாகும் சிலாக்கியத்தை தந்ததிற்காவும், தைரியமாக கிருபாசனத்தண்டை சேர ஏற்படுத்திய வழிக்காகவும் நன்றி. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 2:9