புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 22, 2024)

அநியாயங்களுக்கு உடன்படாதிருங்கள்

தானியேல் 5:22-23

உமது இருதயத்தைத் தாழ்த்தாமல், பரலோகத்தின் ஆண்டவருக்கு விரோதமாக உம்மை உயர்த்தினீர்;


எருசலேமிலிருந்து சிறைப்பட்டுப் போன தானியேல் என்னும் தேவனுடைய மனுஷனானவன், நேபுகாசத்நேச்சாரின் ஆட்சிகாலத்திலிருந்து கோரேஸ் ராஜ்யபாரம்பண்ணும் முதலாம் வருஷமட்டும் பாபிலோனிலே இருந்தான். பெலஷhத்சார் என்னும் ராஜாவின் ஆட்சிகாலத்திலே, ராஜாவானவன், ஆயிரம்பேருக்கு ஒரு பெரிய விருந்துசெய்து, அந்த ஆயிரம் பேருக்கு முன்பாகத் திராட்சரசம் குடித்தான். அவர்கள் எருசலேம் தேவாலயத்திலிருந்து கொண் டுவரப்பட்ட பொன் வெள்ளி பாத்தி ரங்களில் திராட்சை இரசம் குடித்து, பொன்னும் வெள்ளியும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தார்கள். அந்த வேளையிலே, ராஜாவை கலங்கடிக்கும் ஒரு சம்பவம் நடந்தது. அது என்னவெனில், அந்நேரத்திலே மனுஷ கைவிரல்கள் தோன்றி, விளக்குக்கு எதிராக ராஜ அரமனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதிற்று. எழுதின அந்தக் கையுறுப்பை ராஜா கண்டான். இந்த எழுத்தை வாசித்து, இதின் அர்த்தத்தை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ, அவன் இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்ப ணியும் தரிக்கப்பட்டு, ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பான் என்று சொன்னான். தானியேலுக்குளே புதைபொருள்களை வெளிப்படுத்துகின்ற அறிவும் புத்தியும் விசேஷpத்த ஆவியும் இருந்தது. எனவே, அந்த எழுத்துக்களின் விளக்கத்தை கூறி, ராஜ சமுகத்திலே பதவி உயர்வையும், பிரபுக்கள் மற்றும் குடிமக்கள் மத்தியிலே கனத்தையும், மகிமையையும் பெற்றுக் கொள்ளுவதற்கு தானியேலுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். அப்பொழுது, தேவனுக்கு பிரியமான தாசனாகிய தானியேலோ ராஜாவை நோக்கி: உம்முடைய வெகுமானங்கள் உம்மிடத் திலேயே இருக்கட்டும்;. உம்முடைய பரிசுகளை வேறொருவனுக்குக் கொடும்; இந்த எழுத்தை நான் ராஜாவுக்கு வாசித்து, இதின் அர்த்த த்தைத் தெரிவிப்பேன் என்றான். ஏனெனில், ராஜாவானவன், தேவனுடைய காரியங்களை அசட்டை பண்ணுகின்றவனும், தன் இருதயத்தை பரலோகத்தின் ஆண்டவருக்கு விரோதமாக உயர்த்தினபடியால், ராஜாவின் வெகுமதி மிகவும் அருவருப்பானது என்று அறிந்திருந்தான். பிரியமானவர்களே, எல்லா பதவி உயர்வும், வெகுமதிகளும், பரிசுத்த மானவைகளல்ல. அவற்றை வேத வார்த்தையின் வெளிச்சத்தில் ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்.

ஜெபம்:

நீதியின் தேவனே, நான் அறிந்தோ அறியாமலோ, அநீதிக்கும், அநியாயமான பொருட்களிலும், பங்கேற்காதபடிக்கு, என் ஆத்துமாவை பொல்லாப்பிற்கு விலக்கி காத்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 15:27