தியானம் (சித்திரை 20, 2024)
உலகத்தின் போக்கு...
ரோமர் 12:2
நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்,
நான் வேலை செய்யும் இடங்களிலே, தங்கள் செயற்பாடுகளை எவ்வளவு நேர்த்தியாகவும், கிரமமாகவும் செய்து தங்கள் குறிக்கோளை அடைந்து கொள்கின்றார்கள். ஏன் சபை ஐக்கியங்களிலே அவர்களைப்போல உங்களுக்கு சிறப்பாக செய்து முடிக்கக் கூடாதிருக்கின்றது என்று ஒரு மனிதனானவன், தன் மேய்ப்பரானவரோடு நொந்து கொண்டான். அந்த மனிதனானவனை சின்ன வயதிலிருந்து நன்கு அறிந்திருந்த மேய்ப்பரானவர், அவனை நோக்கி: மகனே, முதலாவதாக நீ அறிய வேண்டிய காரியம் என்னவென்றால், வியாபார ஸ்தாபனங்களிலே நடப்பது போல், சபையை நடத் துவதற்கு விசுவாசிகளின் ஆத்துமாவானது ஒரு விற்பனைப் பொருளல்ல. இது ஒரு ஆதாய தொழிலு மல்ல. நஷ்டப்படுகின்ற வியாபார ஸ்தாபனங் கள் நிலைநிற்பதில்லை. ஆனால், நன்மை செய்து நஷ்டம் அடைந்தாலும், தேவனுடைய சபையானது நிலைத்திருக்கும். முள்ளின் மேல் உதைப்பது மனிதர்களுக்கு கடினம். அதுமட்டுமல்ல, நான் அறிய, உன் வாலிப நாட்களிலிருந்து, அற்ப காரியங்களுக்காக, நீ எத்தனை முறை இந்த ஐக்கியத்திலே விதண்டாவாதம் செய்திருக்கின்றாய். ஆனால் வேலை செய்யும் இடங்களிலே அநியாயங்கள் நடந்தாலும், நீ உனக்கு தந்த வேலையை, கிரமமாக, நேரத்திற்கு செய்து முடிப்பத ற்கு அயராது உழைக்கின்றாய். நீ முன்பு செய்த வேலையிலே, உன் இயக்குனருக்கெதிராக வாயடித்தால், விசாரணையேதுமின்றி, நீ உட னடியாக வேலை நீக்கம் செய்யப்பட்டதை நீ அறிந்திருக்கின்றாய். ஆனால், அதை நீ சபை நடுவிலே நீ துணிகரமாக வார்த்தைகளை பேசி விட்டு, ஒன்றும் செய்யாதவனைப் போல இருந்து விடுகின்றாய். உல கமும், அதன் போக்கும், அதன் கிரியைகளும் பொல்லாங்களுக்குள் கிடக்கின்றது என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. (1 யோவான் 5:19). கிறிஸ்துவினுடைய உண்மையுள்ள சபையானது, இந்த உலகத் தின் போக்கிற்கு எதிர்த்து நிற்பதினால், உலகமும் அதை சார்ந்தவர் களும் கிறிஸ்துவின் சபைக்கு எதிர்த்து நிற்கின்றார்கள். ஆண் டவரா கிய இயேசு கிறிஸ்துவானவரே சபையை கட்டுகின்றவர், பாதாளத்தின் வாசல் அதை மேற்கொள்ளாது என்பதை நீ நன்கு அறிந்து கொள் என்று அவனுக்கு புத்திமதி கூறினார். பிரியமானவர்களே, 'நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மை யும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்க தாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.'
ஜெபம்:
அநாதி ஸ்நேகத்தால் என்னை நேசித்த தேவனே, நீர் ஏற்படுத்திய சபைக்காக நன்றி. அநித்தியமானவைகளை நித்தியமானவைகளுக்கு ஒப்பானவைகளாக்காதபடிக்கு என்னை காத்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - மத்தேயு 16:18