தியானம் (சித்திரை 19, 2024)
உன்னதங்களிலே உட்கார செய்த தேவன்
எபேசியர் 2:7
கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடே கூட உட்காரவும் செய்தார்.
சின்ன வயதிலிருந்து பல கஷ்டங்கள் மத்தியிலே வாழ்ந்து வந்த விசுவாசியானவன், ஒழுங்காக தன் பாடங்களை படித்து, திறமைச் சித்தியுடன் பட்டம் பெற்றக் கொண்டான். அவன் செய்து வந்த உத்தியோத்திலும் அவனுக்கு பதவியுயர்வுகள் கிடைத்ததினால், சர்வதேச வர்த்தக கருத்தரங்குகளின் பங்கேற்பதற்காக அழைப்பிதழைப் பெற்றுக் கொண்டான். அந்த கருத்தரங்கிலே, உலக பிரசித்தி பெற்ற: கல் விமான்களும், வர்த்தகர்களும், ஐசுவரியவான்களும், விளையாட் டுத்துறை மற்றும் சினிமா நட்சத் திரங்களும் கலந்து கொண்டு அந்த விழாவை சிறப்பித்த அவர் களோடு உட்காரவும், அவர்க ளோடு சம்பாஷpக்கவும் தனக்கு அரும்பெரும் சந்தர்ப்பம் கிடைத்தது என்று தன் வாழ்வில் ஏற்பட்ட உயர்வைக் குறித்து தனக்குள்ளே பெருமைபாராட்டி வந்தான். சில ஆண்டுகள் சென்ற பின்பு, தேவனாகிய கர்த்தர் தனக்கு ஏற்கனவே கொடுத்திருந்த மேன்மையை உணராதிரு ந்திருந்ததையிட்டு மனம் வருந்தினான். அது என்னவெனில்: 'அக்கிர மங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவி க்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள். அவர்களுக்குள்ளே நாமெல் லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்ற வர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். அக்கிர மங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப் பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.' என்ற வேதத்தின் சத் திய வார்த்தைகளின்படி, திக்கற்றவனாய் வறுமையில் உழன்ற நாட்க ளிலே, தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூ ர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, உலகத்தின் போக்கிலிருந்து விடுவித்து, கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்திருக்க, நான் மறு படியும் உலகத்தாரோடு உயர்ந்த ஸ்தானங்களிலே உட்காருவதை என் வாழ்வின் வளர்ச்சியிலே அதிமேன்மையாக கருதியதை தன் அறியா மை என்று உணர்ந்து கொண்டான். பிரியமானவர்களே, நீங்கள் பெற்றுக் கொண்ட அதி மேன்மையான இரட்சிப்பை நீங்கள் உயர்த்துங்கள்.
ஜெபம்:
நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனேஇ இந்த உலகத்தின் அறிவினால் உண்டாகும் வஞ்சகமான வலைக்குள் நான் சிக்கிவிடாதபடிக்குஇ உம்மை அறிகின்ற அறிவில் வளர கிருபை செய் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - சங்கீதம் 1:1-6