புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 18, 2024)

உலகத்தின் உயர்வான இடங்கள்

எபேசியர் 4:9

ஏறினார் என்பதினாலே அவர் அதற்குமுன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா?


உன்னதத்திலே உயர்ந்தவராக இருக்கிறவராக இருக்கின்ற நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவானர், இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே தாழ்விடங்களிற்கு வந்தார். தங்களை உயர்ந்தவர்கள், ராஜக்கள், பிரபுக்கள் என்று தங்கள் நீதியை பெருமைபாராட்டுகின்றவர்களை யல்ல, பாதாளத்தின் வல்லடியில் அகப்பட்டு, விடுதலையடைய முடியாதிருக்கிற பாவிகளையே விடுதலையாக்கும்படிக்கு, பாதாளம் வரை இறங்கினார் (லூக்கா 19:10, பிலிப் பியர் 2:6-8, மாற்கு 2:17, சங்கீதம் 49:15, 89:48). பாவகட்டுக்களிலே சிறைப்பிடிக்கப்பட்டவர்கள், சமுதாயத்தினால் கைவிடப்பட்டவர்கள், ஆகாதவர்கள் என்று தள்ளப்பட்ட மனிதர்க ளை அவர் தேடிச் சென்றார். அவர்கள் எளிமையும் சிறுமையுமானவர்கள் என்று விட்டுவிடாமல் அவர்கள் கூப்பிடும் சத்தத்தைக் கேட்டார். அவர் கள் இருக்கும் இடத்திலே தரித்து நின்று, அவர்கள் தேவைகளை சந்தித்தார். ஆனால் இன்று சிலர், இந்த உலகத்தின் தாழ்விடங்கிளிலிருந்து, உலகத்தின் உயர்விடங்களுக்கு ஏறிவிடுகின்றார்கள். அதாவது, பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார் என்ற வார்த்தையை தவறான முறையிலே புரிந்து கொண்டு, பூமியின் உயர்விடங்களுக்கு ஏறிய பின்பு, அவர்கள் தாழ்விடங்களிலு ள்ளவர்களை கண்டு கொள்வதில்லை. அவர்களை கண்டு கொண்டா லும், அவர்களை கீழானவர்கள் என்ற எண்ணத்துடனேயே நோக்குகின்றார்கள். தேவனாலே உயர்த்தப்பட்டவன், அவன் எங்கிருந்தாலும், தேவ ஆவியானவர் அவனோடிருப்பதினால் மனத்தாழ்மையையும், சாந்த முமுள்ளவனாகவே இருக்கின்றான். கிறிஸ்துவின் சிந்தை அவனுக்குள் இருக்கும். கிறிஸ்துவானவர், 'தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவ னுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணா மல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனு ஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந் தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம் மைத்தாமே தாழ்த்தினார்.' நீங்களும் அதே சிந்தையுடையவர்களாக இருங்கள். இந்த உலகத்தின் உயர்விடங்களிலே அமர்வதை வாஞ்சிக்காமல், நித்தியமானதுக்குரியவைகளை நாடித் தேடுங்கள். மனத் தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள்.

ஜெபம்:

உன்னதமான தேவனே, இந்த உலகத்திலே உயர்ந்த ஸ்தான ங்கள் என்ற கருதப்படுவைகளை நான் வாஞ்சிக்காமல், நித்திய வாழ்விற்குரிய மகிமையானவைகளை நாடும்படிக்கு என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 23:6-7