புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 17, 2024)

நான் யார்?

நீதிமொழிகள் 15:18

கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடியசாந்த முள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.


ஒரு விசுவாசியானவன், அநேக ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த ஸ்தாபனத்திலே, புதிதாக இணைந்து கொண்ட இயக்குனரானவர், அந்த விசுவாசியாவனை காரணமின்றி சற்று கடுமையாக நடத்தி வந்தார். ஆர ம்பத்திலே அவன் கோபமடைந்த போதும், தன் வேலை போய் விடும் என்ற காரணத்தினால், தனக்கு உண்டான இந்த சூழ்நிiலையை எப்படி மேற்கொள்வதென்பதைப் பற்றி, வேலையிலே அனுபவமிக்க சக உத் தியோகத்தர்களோடு கலந்தாலோசி த்தான். வேலையிலே பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது என்பதைக் குறி த்த, முகாமைத்துவ தத்துவங்களை கொண்ட சில புத்தகங்களை, நூலக த்திலிருந்து படித்தான். சில நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு, தன் மனதை ஆற்றிக் கொண்டு, மறு படியும் வேலைக்கு சென்று, தான் கற்றுக் கொண்டவைகளின்படி, அந்த இயக்குனரோடு எந்த பிரச்சனையும் ஏற்படாதபடி நடந்து கொண்டான். அதே விசுவாசியாவன் செல்லும் சபையிலே, குறிப்பிட்ட ஒரு மூப்ப ரானவர், அவனை ஏதோ காரணத்திற்காக கடிந்து கொண்டதால், எந்த தயக்கமுமின்றி, உடனடியாகவே, அவருக்கு பதிலடிகொடுத்து, 'நான் யார் என்று உனக்கு தெரியம் தானே' என்ற அந்த மூப்பரானவரை கடுமையாக கடிந்து கொண்டான். இத்தகைய சம்பவங்களை நீங்களும் கண்டிருக்கலாம் அல்லது கேட்டிருக்காலம். ஒருவேளை நீங்களும் அந்த மூப்பரானவரைப் போலவோ அல்லது அந்த விசுவாசியைப்போலவோ இருந்திருக்கலாம். ஆனால், பிரியமான சகோதர சகோதரிகளே, சற்று சிந்தித் துப் பாருங்கள். கர்த்தருடைய வேதம் நம்முடைய கால்களுக்கு தீபமும், பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கின்றது. வாழ்வு தரும் வார் த்தைகளை கொண்ட சத்திய வேதத்தை கரங்களிலே ஏந்தும் நாம், அவ ற்றின்படி வாழ்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும். இந்த உலகத்தின் தேவைக்காக சிலர் எதையும் விட்டக் கொடுத்து தியாகம் செய்ய ஆயத் தமாக இருக்கின்றார்கள். அப்படியானால் நித்திய ஜீவனுக்காக நாம் எவ்வளவு அதிக ஜாக்கித்தையாக நடந்து கொள்ள வேண்டும் என் பதை அறிந்து கொள்ளுங்கள். கர்த்தருடைய ஆலயத்திலே பயபக்தி யுடனும், மனத்தாழ்மையுடனும் நடக்க கற்றக் கொள்ளுங்கள். கர்த்தர் யாவற்றையும் அறிந்திருக்கின்றார். எனவே யார் எப்படியாக நடந்து கொண்டாலும், நீங்களோ, கர்த்தருடைய பிரியமான பிள்ளைகளைப் போல நடந்து கொள்ளுங்கள்.

ஜெபம்:

என் பிதாவாகிய தேவனே, எந்த சூழ்நிலையிலும், நான் மாம்சத்தில் செயற்படாதபடிக்கு உமக்கு பிரியமான பிள்ளையைப் போல நடந்து கொள்ளும்படிக்கு மனப்பிரகாசமுள்ள கண்களை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 3:1