புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 15, 2024)

என்னுடைய தலாந்துகள்

கொலோசெயர் 3:24

எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.


தானியேல், அனினயா, மீஷhவேல், அசரியா ஆகிய வாலிபர்களுக்கு, தேவனாகிய கர்த்தர்தாமே, அன்றைய உலகத்திலேயுள்ள எல்லா மனி தர்களையும்விட ஞானத்தையும், அறிவையும் மிகையாகவே கொடுத் தார். ஆனாலும், அவர்கள் தேவனிடம் பெற்றுக் கொண்ட ஞானமும், அறிவும், தேவ சித்தத்திற்குட்பட்டதாகவே இருந்தது. ராஜ சமுகத்திலே தாங்கள் பெற்றுக் கொண்ட உயர் ந்த பதவி பறிக்கப்பட்டுப் போனா லும், தங்களுக்கு மரணம் நேரிட் டாலும் அவர்கள் தேவ சித்தத் தையே தங்கள் வாழ்வில் எல்லா வேளைகளிலும் மேன்மைப் படுத் தினார்கள். இன்றைய நாட்களிலே அந்த வாலிபர்களிடமிருந்த தன்மைகளை விசுவாசிகள் மத்தியிலும் காண்பது மிகவும் அரிதாகவே இருக்கின்றது. வாலிபர்கள் மத்தியில் மட்டுமல்ல, வளர்ந்தவர்கள், உயர்ந்தவர்கள், அனுபவமிக்கவர்கள் மத்தி யிலும் இவை குறைவாகவே இருக்கின்றது. படித்து, பட்டம் பெற்று, வேலையில் அமரும் வரைக்கும்,தேவனுடைய நாமத்தைக் குறித்து பல சாட்சிகளை கூறிக் கொள் வார்கள். சபையிலே, அநேகர் அவர்களுடைய முன்னேற்றங்களுக்காக ஜெபிக்கின்றார்கள். ஆனால், வேலையிலும், வெளியிடங்களிலுமுள்ள உலகத்தினால் உண்டாகும் மேன்மையைக் கண்டவுடன், சபையையும், சபை ஊழியர்களையும், தேவ காரியங்களை யும் குறித்து அவர்களுடைய மனநிலை மாறிப்போய்விடுகின்றது. வேலை யை தக்கவைப்பதற்காக, அதிபர்களின் ஆதரவை பெற்றுக் கொள்ளும் படிக்கு, வேiலையிலே உண்டாகும் பிரச்சனைகளை தீர்த்து வைப்பத ற்கு, இரவோ, பகலோ, நடு ஜாமமோ, அதிகாலையோ என்று நேரத் தைப் பார்க்காமல், தங்கள் முழு இருதயத்தோடும், முழுபெலத்தோடும் அயராது உழைக்க ஆயத்தமுள்ளவர்களாகவே இருக்கின்றார்கள். ஆனால், தேவனுடைய ராஜ்யத்தின் வேலைக்கு, அதிகமான நிபந்தனைகளை முன்வைக்கின்றார்கள். இவ்வண்ணமாக அவர்களுடைய அறிவும், ஆற்றலும், தேவனுடைய ராஜ்யத்தை கட்டுவதைவிட, இந்த பூமியிலுள்ள எஜமான்களை ஐசுவரியவான்களாகனாக மாற்றுவதே பயனுள்ளதாக அவரடகளுக்கு மாறிவிடுகின்றது. தானியேலும், அவனுடைய நண்பர் களைப் போலவும் நாம் உண்மையுள்ள மனதோடு வேலையை செய்ய வேண்டும். அதே போல நம்முடைய தலாந்துகள் யாவும் தேவ சித்தத்தி ற்கு உட்பட்டதாயும், தேவ ராஜ்யத்திற்கு பயனள்ளதாகவும் கணாப்படல் வேண்டும்;. நாம் மனுஷர்களுக்கல்ல தேவனுக்கே ஊழியம் செய்கின் றோம் அது நம்முடைய பாக்கியம் என்ற சிந்தை நம்மில் ஒவ்வொரு வருக்கும் எப்போதும் இருக்க வேண்டும்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, என்னிடமுள்ளவைகளெல்லாம் நீர் தந்தவைகள். அவை யாவும் உம்முடைய ராஜ்யத்தின் மேன்மைக்கு பயனுள்ளதாகும்படிக்கு என் மனக்கண்களை திறந்து விடுவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 17:10